Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பீட்ரூட்டை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Beetroot Pachadi Recipe In Tamil: பொதுவாக பீட்ரூட்டை பொரியல், கூட்டு, சட்னி என்று செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பீட்ரூட்டை வித்தியாசமாக செய்து சாப்பிட நினைத்தால், அதைக் கொண்டு பீட்ரூட் பச்சடி செய்து சாப்பிடுங்கள். இப்படி பீட்ரூட்டைக் கொண்டு பச்சடி செய்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, ருசி பிரமாதமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் பீட்ரூட்டை அவ்வளவு பிரியமாக விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால் அவர்களுக்கு பீட்ரூட் பச்சடி செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

உங்களுக்கு பீட்ரூட் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 1 (துருவியது)
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1 கப்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - சிறிய துண்டு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய பீட்ரூட்டை
சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி,
சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வெந்து கொண்டிருக்கும் பீட்ரூட்டுடன் அரைத்த தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் மூடி வைத்து பச்சை வாசனை போக வேக
வைக்க வேண்டும்.
* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 1 கப் தயிரை சேர்த்து, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
பச்சடியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பீட்ரூட் பச்சடி தயார்.



Click it and Unblock the Notifications











