Just In
- 10 hrs ago
க்ரீமி சிக்கன் கிரேவி
- 11 hrs ago
கொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...!
- 15 hrs ago
வார ராசிபலன் (18.04.2021 முதல் 24.04.2021 வரை) - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…
- 16 hrs ago
இன்றைய ராசிப்பலன் (18.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவு எதையும் எடுக்கக்கூடாது…
Don't Miss
- News
புதிய உச்சம்.. தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பரவல்.. புதிய கட்டுப்பாடுகள் பலன் தருமா?
- Finance
கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் !
- Sports
மார்கன், ரஸ்ஸல் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்... பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் ஆர்சிபி பௌலர்!
- Movies
வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ரொட்டி, புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கடலைப் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.
இந்த ஆந்திரா கடலைப் பருப்பு உசிலி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே ஆந்திரா ஸ்டைல் கடலைப்பருப்பு உசிலி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீபூன்
* சீரகம் - 1 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.
* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen