Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
முருங்கைக்காயை சாம்பார் வைக்காம இந்த மாதிரி பொரிச்ச குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Murungaikai Poricha Kulambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காயை வைத்து சூப்பரான பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த செட்டிநாடு முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், முருங்கைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கைக்காயை சாம்பார், பொரியலாக சாப்பிட்டே போரடித்தவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கு செட்டிநாடு முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முருங்கைக்காய் - 2
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- தக்காளி - 2
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- அரிசி மாவு - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- முருங்கைக்காயை முதலில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை கீறி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பை தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும்.
- அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்க்கவும். குக்கருக்குள் பொருந்தக்கூடிய ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அந்தக் கிண்ணத்தில், நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளைப் போடவும். அதனுடன் 4 ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். முருங்கைக்காய் துண்டுகள் நீராவியிலேயே வெந்துவிடும். குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பாசிப்பருப்பை வேக வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேங்காய் மற்றும் அரிசியை மென்மையான விழுதாக அரைக்கவும்.
- பிரஷர் முழுமையாக வெளியேறிய பிறகு குக்கரைத் திறந்து, முருங்கைக்காய் இருந்த கிண்ணத்தை வெளியே எடுக்கவும். பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில், மசித்த பாசிப்பருப்பு, வேக வைத்த முருங்கைக்காய், சாம்பார் தூள், நறுக்கிய தக்காளி , உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றைச் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- இறுதியாக, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து, இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இதை குழம்பின் மீது ஊற்றி நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் சூப்பரான முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
