Latest Updates
-
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்..
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
Iyengar Style Milagu Kuzhambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை மிளகு குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த மிளகுக் குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த மிளகு குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் மிளகு குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- வெல்லம் - சிறிய துண்டு
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- மிளகு - ஒன்றரை ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- சீரகம் - ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிக்க:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாற்றை எடுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மிளகு, உளுந்தம்பருப்பு, வர மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- மிளகு வெடிக்கத் தொடங்கி, உளுத்தம்பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அவை ஆறிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது கறிவேப்பிலையைச் சேர்க்கவும். புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை அதை நன்கு கொதிக்கவிடவும்.
- குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கவும். பிறகு, அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைச் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெடி. சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து இந்த குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
