Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
Thalluvandi Vengaya Chutney Recipe in Tamil: என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து சுவையாக செய்தாலும் செய்ய முயற்சித்தாலும் ஹோட்டல்களில் சாப்பிடும் உணவின் அதே சுவை கிடைப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் மனக்குறையாக தான் இருக்கிறது. அதே போல் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தாலும், ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவிற்கு என்று தனி இடம் உண்டு எப்போதும். அந்த வகையில் நாம் ரகம் ரகமாய் வீட்டில் சட்டினி செய்தாலும், ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்டினி சுவை சில நேரத்தில் நாவிலேயே இருக்கும்.

அந்த வகையில் தள்ளுவண்டியில் கிடைக்கும் வெங்காய சட்னியின் மிகவும் தனித்துவமானதாக இருக்கும். மேலும் இது தண்ணீர் போல இருப்பதால் இட்லி, தோசையை ஊறவைத்து சாப்பிட வேற லெவலில் இருக்கும். உங்களுக்கும் தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி செய்ய விரும்பினால் உங்களுக்கான பதிவுதான் இது.
உங்களுக்கு தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தள்ளுவண்டி வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 10 சின்ன வெங்காயம்
- 4 வர மிளகாய்
- 2 காஷ்மீரி மிளகாய்
- 5 பல் பூண்டு
- 1 ஸ்பூன் தோசை மாவு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
-2 சிட்டிகை பெருங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு மிக்சர் ஜாரில், நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பூண்டுப் பல், வர மிளகாய், நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியவிடவும்.
- அதில் அரைத்து வைத்துள்ள சட்னியைச் சேர்த்து, அதிலிருந்து எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, அதன் பச்சை வாசனை முழுமையாக நீங்கும் வரை சில நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் தோசை மாவை எடுத்து, அதை நீர்த்துப் போக வைக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். கொதித்துக்கொண்டிருக்கும் சட்னியில் இதைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- சிறிது கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி அல்லது தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications