Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்..
Vengaya Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை, சப்பாத்தி செய்வீர்களா? அதற்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ்ஷை முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சின்ன வெங்காய தொக்கு செய்யுங்கள்.

இந்த சின்ன வெங்காய தொக்கு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த தொக்கை காலையில் செய்து வைத்தால், மதியமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த வெங்காய தொக்கு குறித்து வேம்பு கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு வெங்காய தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காய விழுது - 1/4 கப்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 8-10
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம்
மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, நன்கு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வறுத்த அரைத்த பொடியை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, எண்ணெய் பிரியும் நன்கு
நன்கு வேக வைத்து இறக்கினால், வெங்காய தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
