Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க..
Chef Vani's Tomato Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் சட்னி தான் ரொம்ப பிடிக்குமா? அதுவும் தக்காளி சட்னி என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? இதனாலேயே உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னியை செய்வீர்களா?

பொதுவாக தக்காளி சட்னியை பல விதங்களில் செய்யலாம். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் தக்காளி சட்னியை செய்வார்கள். அதற்கேற்ப ஒவ்வொன்றின் சுவையும் வேறுபடும்.
2024-ல் நடந்த மாஸ்டர் செஃப் தமிழ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற செஃப் வாணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் அடிக்கடி தனது அம்மா செய்து கொடுக்கும் ஒரு தக்காளி சட்னி குறித்து பகிர்ந்துள்ளார்.
உங்களுக்கு இந்த தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 12 பல்
* வரமிளகாய் - 12
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 25
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த
சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
