Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்..
Chef Vani's Murungakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? பொதுவாக முருங்கைக்காய் வாங்கினால், அதைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் முருங்கைக்காய் நிறைய இருந்தால், அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள்.

அதுவும் 2024-ல் நடந்த மாஸ்டர் செஃப் தமிழ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற செஃப் வாணி அவர்கள் தனது பாட்டியின் முருங்கைக்காய் பொரியல் ரெசிபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த முருங்கைக்காய் பொரியல் சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்றிற்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். இதன் ஸ்பெஷலே மசாலா அரைத்து சேர்த்து செய்வது தான்.
உங்களுக்கு செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 10
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 4
* பூண்டு - 2 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீர்
நன்கு சூடானதும், அதில் துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காய் சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 10 நிமிடம் முருங்கைக்காயை வேக
வைக்க வேண்டும்.
* அதற்கு பொரியலுக்கு மசாலா அரைத்துக் கொள்ளலாம். அந்த மசாலாவிற்கு
மிக்சர் ஜாரில் வரமிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, துருவிய
தேங்காய் சேர்த்து, நன்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* முருங்கைக்காய் 75% வெந்ததும், அதில் மசாலாவை சேர்த்து, தேவையான
அளவு உப்பு சேர்த்து, காயில் உள்ள நீர் வற்றும் வரை நன்கு கிளறி
விட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
* முருங்கைக்காய் நன்கு வெந்து, மசாலாவில் இருந்து பச்சை வாசனை
போனதும் அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
பொரியலுடன் சேர்த்து கிளறினால், சுவையான முருங்கைக்காய் பொரியல்
தயார்.



Click it and Unblock the Notifications