Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Pollachi Pichi Potta Kozhi Puttu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அந்த சிக்கனை எப்போதும் கிரேவி, வறுவல், தொக்கு, சிக்கன் 65 என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் பொள்ளாச்சி பிச்சிப் போட்ட கோழி புட்டு செய்து சாப்பிடுங்கள்.

இந்த ரெசிபி பொள்ளாச்சியில் மிகவும் பிரபலமானது. நன்கு காரசாரமாக இருக்கும் இந்த புட்டு, ஒரு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி இந்த ரெசிபியை செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.
இந்த பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபி குறித்து செஃப் வாணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி, சிக்கனை கழுவி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, சிக்கனை நன்கு
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து பிச்சுப்போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து,
அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பிச்சுப்போட்ட சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்
மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் துருவிய
தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பொள்ளாச்சி பிச்சு போட்டு
கோழி புட்டு தயார்.



Click it and Unblock the Notifications
