Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Chicken Thokku Recipe By Chef Deena: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்கி செய்வீர்களா? எப்போதும் சிக்கனை வாங்கினால், அதைக் கொண்டு ஒரே சுவையில் குழம்பு, கிரேவி, வறுவல், சிக்கன் 65 என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை சிக்கனை வாங்கினால் செஃப் தீனா அவர்களின் ஸ்டைலில் சிக்கன் தொக்கு ரெசிபியை செய்யுங்கள்.

இந்த சிக்கன் தொக்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த சிக்கன் தொக்கு ரெசிபியை செய்தால், பின் அடிக்கடி இதை செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த சிக்கன் தொக்கு ரெசிபியை செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த சிக்கன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 100 மிலி
* கொத்தமல்லி - சிறிது
* சிக்கன் - 1/2 கிலோ
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 12 பல் (தட்டியது)
* வரமிளகாய் - 4
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அத்துடன்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1
டீஸ்பூன் மல்லித் தூள், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை சேர்த்து, சிறிது கொத்தமல்லியைத் தூவி, கழுவி
வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை
சேர்த்து, அத்துடன் வரமிளகாயை உடைத்து சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி
விட வேண்டும்.
* திறந்த நிலையிலேயே சிக்கனை கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதை இறக்கி, சிறிது கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான சிக்கன் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications