Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Arachuvitta Sambar Without Dal Recipe in Tamil: தென்னிந்தியாவில் சாம்பார் மிகவும் பிரபலமான உணவாகும். தென்னிந்தியர்களையும், சாம்பாரையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. இது சாத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற அற்புதமான சைடிஷாகும். இந்த சாம்பாரை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் சமைப்பார்கள். தமிழ்நாட்டிலேயே பல வழிகளில் சாம்பாரை செய்வார்கள். சொல்லப்போனால் பருப்பே இல்லாத அரைச்சு விட்ட சாம்பார் வகைகளும் உள்ளது.

இந்த அரைச்சு விட்ட பருப்பு இல்லாத சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். வழக்கமான சாம்பார் சாப்பிட்டு உங்களுக்கு போரடிச்சிருச்சா? அப்படியானால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் மற்றும் மாங்காய் போன்றவற்றை வைத்து இந்த சூப்பரான சாம்பாரை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த வகை சம்பார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு பருப்பு சேர்க்காத அரைச்சு விட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு இல்லாத அரைச்சு விட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- காய்கறிகள் - 1 கப் (1 கேரட், 5 பீன்ஸ், 2 முருங்கைக்காய், 2
கத்திரிக்காய்)
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- பழுத்த தக்காளி - 1
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தனியா - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வர மிளகாய் - 4
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
- பச்சரிசி - 1/2 ஸ்பூன்
தாளிக்க:
- நெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- அனைத்து காய்கறிகளையும் கழுவி விரும்பிய வடிவத்தில் நறுக்கி, அவற்றை தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, தனியா, கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் பச்சரிசியை சேர்த்து வறுக்கவும்.
- இறுதியாகத் தேங்காயைச் சேர்த்து, ஒரு நிமிடம் வறுக்கவும். இதை அரைத்துப் பொடியாக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, அது குழைந்து போகும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இறுதியாக, அரைத்த பொடியைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- இதை தாளிக்க ஒரு கடாயில் நெய்யில் கடுகு சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து கிளறி இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பருப்ப இல்லாத அரைத்து விட்ட சாம்பார் ரெடி!



Click it and Unblock the Notifications