Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சப்பாத்திக்கு ஏற்ற ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பருப்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Andhra Special Sorakaya Pappu Recipe In Tamil: அடிக்கடி உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வீர்களா? சப்பாத்திக்கு ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? ஆனால் அதை யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த சுரைக்காயைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் பருப்பு செய்யுங்கள்.
இந்த ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பருப்பு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இதை 15 நிமிடத்தில் செய்துவிடலாம். பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். குறிப்பாக சுரைக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பருப்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சுரைக்காய் - 250 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, காய் முற்றியதாக
இருந்தால், அதன் விதைகளை நீக்கிவிட்டும், பிஞ்சு காயாக இருந்தால்,
விதைகளுடனேயும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் சிறிது நீரை
ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை முழுதாக சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலையும் தூவி நன்கு வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி, காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான
தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பப்பு தயார்.



Click it and Unblock the Notifications











