டெல்லி ஸ்பெஷல் ஆலு சாட் மசாலா எப்படி எளிதாக தயாரிக்கலாம்?- செம்ம டேஸ்ட்டி ரெசிபி!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஆலு சாட் ரெசிபி டெல்லியில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.

இந்த காரசாரமான ஆலு சாட் ரெசிபியை எப்படி படிப்படியாக செய்வது என்பதை வீடியோ மற்றும் செய்முறை விளக்கத்துடன் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆலு சாட் ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன், ரொம்ப மிருதுவாக உள்ள உருளைக்கிழங்கை தட்டில் வைத்து இதனுடன் காரசாரமான மசாலா தூவி, இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். இந்த ரெசிபியை கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

ஆலு சாட் ரெசிபி வீடியோ

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி | ஆலு சாட் செய்முறை|டிலி கி ஆலு சாட் ரெசிபி| ஸ்பைசி பொட்டேட்டோ சாட் ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
10M
Total Time
30 Mins

Recipe By: ப்ரியங்கா த்யாகி

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 3-4 நபர்கள்

Ingredients
 • உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)

  ஆயில் - வதக்குவதற்கு தேவையான அளவு

  உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

  காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

  உலர்ந்த மாங்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

  சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

  சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

  எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

  புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்

  கொத்தமல்லி புதினா சட்னி - 1/2 டேபிள் ஸ்பூன்

  ஓமப் பொடி(சேவ்) - 1 சிறிய கிண்ணல் அளவிற்கு

  கொத்தமல்லி இலைகள் - நறுக்கியது (அலங்காரத்திற்கு )

  மாதுளை - அலங்காரத்திற்கு

Red Rice Kanda Poha
How to Prepare
 • 1.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். இப்பொழுது சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

  2.அது பொன்னிறமாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

  3.அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்

  4.பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்

  5.பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்

  6.பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்

  7.இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.

  8.இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் இன்னும் கலர்ஃபுல்லான ஆலு சாட் ரெசிபி ரெடி

Instructions
 • 1.உங்கள் தேவைக்கு ஏற்ப காரங்களை போட்டுக் கொள்ளவும்.
 • 2.டயட் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை வதக்குவதற்கு பதிலாக ஓவனில் வைத்து எண்ணெய் இல்லாமல் சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.
Nutritional Information
 • கலோரிகள் - 334 காலோரிஸ்
 • கொழுப்பு - 27.4 கிராம்
 • புரோட்டீன் - 3.2 கிராம்
 • கார்போஹைட்ரேட் - 18.7கிராம்
 • நார்ச்சத்து - 3.6 கிராம்

ஆலு சாட் செய்முறை

1.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். இப்பொழுது சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

2.அது பொன்னிறமாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

ஆலு சாட் ரெசிபி

3.அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

4.பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

5.பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

6.பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

7.இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.

ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி
ஆலு சாட் ரெசிபி

8.இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் இன்னும் கலர்ஃபுல்லான ஆலு சாட் ரெசிபி ரெடி

ஆலு சாட் ரெசிபி
[ 3.5 of 5 - 78 Users]