Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
வாயில் வைத்ததும் கரையும் செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Special Aadi Kummayam Recipe In Tamil: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கிழமைகளில் மக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பிரசாதத்தை சமைத்து படைத்து வழிபட்டு வருவார்கள்.
பிரசாதம் என்பது நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்து படைப்பது தான். அந்த வகையில் ஆடி மாதத்தில் ஆடி கும்மாயம் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட். இந்த ஸ்வீட்டை செய்வதற்கு குறைவான பொருட்களே போதுமானது. இருப்பினும் இது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த ஸ்வீட்டை ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வெல்லம்/நாட்டுச்சர்க்கரை - 2 கப்
* பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு
சேர்த்து பொன்னிறமாகி நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து, 2 நிமிடம் வறுத்து
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி செய்து
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் நீரை ஊற்றி,
அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வெல்லம் கரைந்ததும்,
அதை இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதி நெய்யை ஊற்றி
கிளறி, அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு கப் எடுத்து நெய்யுடன் சேர்த்து
2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வெல்ல நீரை ஊற்றி, நீர் வற்றும் வரை வதக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய்யை
ஊற்றி, குறைவான தீயில் வைத்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க
வேண்டும். இப்போது சுவையான ஆடி கும்மாயம் தயார்.



Click it and Unblock the Notifications









