For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது லூபஸ் பிரச்சனையுடன் வாழ்வதற்கான சில டிப்ஸ்...

எல்லா பெண்களுக்கும் வழக்கமான மகப்பேறுக்கு முற்பட்ட மருத்துவ பரிசோதனை முக்கியமானது. ஆனால் லூபஸ் உள்ள ஒரு பெண்ணின் விஷயத்தில் இந்த பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

|

லூபஸ் என்பது ஒரு நீண்டகால தன்னுடல் தாக்க நோயாகும். இப்பிரச்சனையால் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிவேகமாக மாறி சாதாரண, ஆரோக்கியமான திசுக்களை தாக்குகிறது. அழற்சி, வீக்கம், மற்றும் மூட்டுகள், தோல், சிறுநீரகங்கள், இரத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

லூபஸ் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்காது. ஆனால் இது சிக்கல்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது. கர்ப்பங்களுக்கு முறையான பராமரிப்பு தேவை. குறிப்பாக மற்றொரு சுகாதார நிலை பாதிப்பு இருக்கும் போது அதிக பராமரிப்புத் தேவை.

Tips for Living with Lupus While Pregnant

லூபஸுடனான அனைத்து கர்ப்பங்களும் சிக்கல்களின் அதிக ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது மற்றும் சுமார் 50 சதவீத நிகழ்வுகளில், பெண்கள் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுள் சில சிக்கல்கள் முன்கூட்டிய பிரசவம், முன்சூல்வலிப்பு, கருச்சிதைவு ஆபத்து மற்றும் குழந்தையின் இதய பிரச்சினைகள் போன்றவையாகும்.

MOST READ: உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்!

எல்லா பெண்களுக்கும் வழக்கமான மகப்பேறுக்கு முற்பட்ட மருத்துவ பரிசோதனை முக்கியமானது. ஆனால் லூபஸ் உள்ள ஒரு பெண்ணின் விஷயத்தில் இந்த பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். சிகிச்சையானது முன்கூட்டியே தொடங்கினால் பல சாத்தியமான சுகாதார நிலைமைகளை முளையிலேயே கிள்ளி எறிய வாய்ப்பு உண்டு. உங்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்து மற்றும் நீங்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். நீங்கள் கருத்தரித்த பிறகு எதிர்பார்க்கப்படும் சிக்கல்களைச் சமாளிக்க சிறந்த வழி முன்பே திட்டமிடுவது.

கர்ப்ப காலத்தில், பின்வரும் உதவிக் குறிப்புகளுடன் உங்கள் சிக்கல்களை சிறப்பாக நிர்வகிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்கவும்

உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்கவும்

முன்கூட்டிய பிரசவம் உள்ளிட்ட அசாதாரணங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதால், லூபஸ் உள்ள பெண்கள் தங்கள் நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம். குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நான்கில் ஒரு பங்கு லூபஸ் கர்ப்பம் குழந்தையின் முன்கூட்டிய பிரசவத்திற்கு வழிவகுக்கும். இது ப்ரீக்ளாம்ப்சியாவால் உண்டாக்கப்படுகிறது. இது உடல் திசுக்களின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு செய்ய முடிந்த ஒரே சிகிச்சையானது குழந்தையை பிரசவிப்பதாகும். உங்கள் மருத்துவரை தவறாமல் பார்வையிடுவது குழந்தை எவ்வாறு வளர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவும். இவை அனைத்தும் தாய்க்கும், மருத்துவருக்கும் ஒரு கர்ப்பத்தின் அனைத்து அம்சங்களையும் கவனித்துக் கொள்வதை எளிதாக்குகிறது.

லூபஸ் சோர்வைத் தவிர்க்கவும்

லூபஸ் சோர்வைத் தவிர்க்கவும்

அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முக்கியம். லூபஸுடன் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பொறுத்தவரை, நல்ல ஊட்டச்சத்துடன் நிறைய ஓய்வு எடுப்பது இன்னும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை சீராக வைத்திருங்கள். உங்கள் செயல்பாடுகள் வலி அல்லது சோர்வை ஏற்படுத்தக்கூடாது. அவை சோர்வை உண்டாக்கினால், அவற்றை மாற்றவோ கைவிடவோ தயாராக இருங்கள். ஆனால் ஆரோக்கியமான கர்ப்பத்திற்காக லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபட மறக்காதீர்கள்.

லூபஸ் எரிப்பு

லூபஸ் எரிப்பு

கர்ப்ப காலத்தில் லூபஸ் எரிப்பு பொதுவானதல்ல. சில பெண்கள் உண்மையில் கர்ப்ப காலத்தில் தங்கள் லூபஸ் அறிகுறிகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உங்களுக்கு எரிச்சல் அனுபவம் இருந்தால், அது லூபஸ் காரணமா அல்லது கர்ப்ப அறிகுறிகளில் ஒன்றா என்பதை உங்கள் மருத்துவரிடம் அறிந்துக் கொள்ளுங்கள். லூபஸ் மற்றும் கர்ப்பத்தால் தூண்டப்பட்ட எரிச்சல் உணர்வு மிகவும் ஒத்திருப்பதால், நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மூட்டு வீக்கம், திரவக் குவிப்பு, முகத்தில் வெடிப்பு மற்றும் கூந்தலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை லூபஸ் எரிச்சலின் சில அறிகுறிகளாகும், அவை கர்ப்பத்தின் காரணமாக ஏற்படும் எரிச்சலுக்கு சமமானவை.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

ஐந்து லூபஸ் கர்ப்பங்களில் ஒன்றில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படுகிறது. புகைபிடிக்கும் பெண்களில் இது அதிகம் காணப்படுகிறது. நீங்கள் புகைபிடிப்பதைக் கைவிட இது ஒரு காரணமாக அமையலாம்! பிரீக்ளாம்ப்சியாவை குணப்படுத்த ஒரே வழி முன்கூட்டிய பிரசவம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips for Living with Lupus While Pregnant

Here are some tips for living with lupus while pregnant. Read on...
Desktop Bottom Promotion