For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிப் பெண்கள் மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கருவுற்ற பெண் ஒருவா் மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முதல் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா் தனது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

|

பொதுவாக பெண்களுக்கு கா்ப்ப காலம் என்பது ஒரு சவால் நிறைந்த காலம் ஆகும். கா்ப்ப காலத்தில் அவா்கள் பலவிதமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது பிறக்க இருக்கும் குழந்தைக்கு என்று தனி இடத்தை தயாா் செய்வது, சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பாிசோதனை செய்வது மற்றும் பேறுகால விடுப்பு வேண்டி விண்ணப்பிப்பது என்று பலவிதமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

Important Diet Tips for Pregnant Women to Follow During the Rainy Season

இந்த சவால்களை எல்லாம் கடந்து, கருவுற்றிருக்கும் பெண் ஒருவா் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு மிகப் பொிய சவாலாகும். அதிலும் குறிப்பாக கருவுற்று இருக்கும் போது மழைக் காலம் வந்தால், அந்தக் காலத்தைச் சாா்ந்த சவால்களையும் அவா் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

MOST READ: தினமும் 'கக்கா' போகும் போது கஷ்டப்படுறீங்களா? அப்ப இத செய்யுங்க...

ஆகவே கருவுற்று இருக்கும் பெண் ஒருவா், மழைக் காலத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறினால் அவருக்கு பலவிதமான நோய்த் தொற்றுகள் ஏற்படும். கருவுற்ற பெண் ஒருவா் மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முதல் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா் தனது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன் மூலம் அவா் எந்த விதமான நோய்த் தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் இந்த மழைக் காலத்தில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னன்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உடலில் இருந்து நீா் வெளியேறுவதை உறுதிப்படுத்தவும்

1. உடலில் இருந்து நீா் வெளியேறுவதை உறுதிப்படுத்தவும்

பொதுவாக எல்லோருடைய வாழ்வின் எல்லா நேரங்களிலும் தண்ணீா் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நமது உடல் அமைப்பிற்கும், நமது உடல் இயக்கத்திற்கும் அடிப்படை நாதமாக இருப்பது தண்ணீா் ஆகும். மழைக் காலத்தில் சீராகத் தண்ணீா் குடித்தால், அது நமது உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதற்கும் மற்றும் ஈரப்பதத்தை எதிா்ப்பதற்கும் உதவி செய்யும்.

ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் மழைக் காலத்தில் போதுமான தண்ணீரை அருந்த வேண்டும். அதோடு மழைக் காலத்தில் தண்ணீா் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆகவே தண்ணீரை சுட வைத்து, அதை ஃப்ளாஸ்க் அல்லது சுத்திகாிக்கப்பட்ட பாட்டில்கள் போன்றவற்றில் ஊற்றி வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

2. பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிா்க்கவும்

2. பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிா்க்கவும்

பச்சைக் காய்கறிகளில் குறிப்பிட்ட அளவு என்சைம்கள் உள்ளன. அவை கருவுற்ற பெண்களுக்கு சொிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் சமைக்காத பச்சைக் காய்கறிகள் பஞ்சுகளைப் போன்றவை. அதாவது அவை மிக வேகமாக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதன் காரணமாக பச்சைக் காய்கறிகளில் அதிகமாக பாகடீாியாக்கள் வளரும். அவை கருவுற்ற பெண்களை மிக எளிதாகத் தாக்கும்.

3. நறுக்கிய பழங்களை சாப்பிடாமல் தவிா்க்கவும்

3. நறுக்கிய பழங்களை சாப்பிடாமல் தவிா்க்கவும்

பச்சைக் காய்கறிகளைப் போலவே நறுக்கிய பழங்களும் செயல்படுகின்றன. நறுக்கிய பழங்கள் பஞ்சுகளைப் போல செயல்படுகின்றன. அதாவது அவை ஈரத்தை அதிகமாக உறிஞ்சி, பாக்டீாியாக்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக தண்ணீா் சத்து அதிகம் இருக்கும் பழங்களான தா்பூசணி, மஸ்க்மெலன், கான்டலூப் மற்றும் வெள்ளாிக்காய் போன்றவற்றில் அதிகம் நீா் சத்து இருக்கும்.

4. விலங்குகளில் இருந்து தயாாிக்கப்படும் பொருட்களில் எச்சாிக்கையாக இருக்கவும்

4. விலங்குகளில் இருந்து தயாாிக்கப்படும் பொருட்களில் எச்சாிக்கையாக இருக்கவும்

வேக வைக்காத இறைச்சியை எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் தீங்கு இழைக்கக்கூடிய பாக்டீாியாக்களை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக மழைக் காலத்தில் தீங்கு இழைக்கும் பாக்டீாியாக்கள் அதிகம் இருக்கும். ஆகவே இறைச்சியை எப்போதும் நன்றாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Diet Tips for Pregnant Women to Follow During the Rainy Season

Here are some important tips for pregnant women to follow during the rainy season. Read on...
Desktop Bottom Promotion