கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வளவு உடல் எடை அதிகரிக்க வேண்டும்?

Written By:
Subscribe to Boldsky

இன்றைய பெண்களில் பலருக்கும் கர்ப்ப காலத்தில் உடல் எடை பிரச்சனை என்பது இருக்கிறது.. ஒரு சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக குறைந்த எடையுடன் இருக்கிறார்கள்.. மேலும் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக அதிக எடையுடன் இருக்கிறார்கள்..

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி அது குழந்தையின் ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கும் என்பது பற்றி தெரியுமா?

கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவானது தொப்புள் கொடி வழியாக தான் செல்கிறது என்பதால், தாய் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது மிக மிக அவசியமானதாகும்.. இல்லை என்றால் இது குழந்தையை பாதிக்கும்.. இந்த பகுதியில் பெண்கள் கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் பெண்களின் எடையானது சுமார், 12 கிலோ முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும். எனவே இதற்காக பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்.

உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது என்பது அவசியமாகும்..

உடல் எடை குறைவா?

உடல் எடை குறைவா?

உடல் எடை குறைவாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில், 13 முதல் 18 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இதற்காக இவர்கள் சிரமம் பார்க்காமல் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

எடை அதிகமா?

எடை அதிகமா?

உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யாமல், 7 கிலோ முதல் 11 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதிகரிக்கும் முறை

அதிகரிக்கும் முறை

முதன் முதலில் கர்பமடைந்த பெண்கள் தங்களது உடல் எடையை முதல் மூன்று மாதங்களில் 1 கிலோ முதல் 2 கிலோ வரையில் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரங்களிலும் அரை கிலோ கிராம் வரையில் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டியது அவசியமாகும்.

இரட்டை குழந்தையா?

இரட்டை குழந்தையா?

உங்களுக்கு இரட்டை குழந்தை என்றால், நீங்கள் 16 கிலோ கிராம் முதல் 20 கிலோ கிராம் வரையில் தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

எதை பொருத்தது?

எதை பொருத்தது?

பொதுவாக கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களும் ஒரே மாதிரியான எடையில் இருக்க மாட்டார்கள்.. கர்ப்ப காலத்தில் உடல் எடையானது உங்களது உயரம், எடை, வயது ஆகியவற்றை பொருத்து எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்று உங்களது மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார்.

எடை குறையுமா?

எடை குறையுமா?

கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில், உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பை விட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

எப்போது அதிகரிக்கும்?

எப்போது அதிகரிக்கும்?

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14 வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

0 முதல் 14 வாரம்

0 முதல் 14 வாரம்

எடை அதிகரிப்பு இருக்காது. பத்தாவது வார வாக்கில்தான் ரத்த ஓட்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும். பதினான்காவது வார வாக்கில் பசி எடுக்கும் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும். இந்த நேரத்தில்தான் கர்ப்பிணி தான் விரும்பியதை அல்லது அவ்வப்போது கிடைப்பதை சாப்பிட ஆரம்பிப்பாள்.

14 முதல் 20 வாரம்

14 முதல் 20 வாரம்

2 அல்லது 3 கிலோ வரை அதிகரிக்கலாம். இதற்கு மேல் அதிகரித்தால் கர்ப்ப ஜன்னி நோய்க்கு வழி வகுக்கும். இது தாய்க்கும் கருவுக்கும் நல்லதல்ல.

20 முதல் 30 வாரம்

20 முதல் 30 வாரம்

மொத்தம் 4.5 கிலோ வரை கூடலாம். இந்த காலக் கட்டத்தில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினம். ஆனால் கட்டுப்பாட்டுடன் இருந்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

30 முதல் 36 வாரம்

30 முதல் 36 வாரம்

மொத்தம் 2 அல்லது 3 கிலோ. இந்த வாரத்தில் கர்ப்பிணியின் எடை மாயாஜாலம் போல உயரும். இவ்வாறு உயரும்போது கர்ப்ப ஜன்னி நோய் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் எடை உயர்வைக் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

36 முதல் 40 வாரம்

36 முதல் 40 வாரம்

இந்த காலக்கட்டத்தில் குழந்தை எந்த நேரத்திலும் பிறக்கலாம் என்பதால் கர்ப்பிணி எடை உயரக்கூடாது. உண்மையைச் சொல்லப் போனால் 38-வது வாரத்துக்குப் பிறகு கர்ப்பிணியின் எடை அதிகரிப்பதற்கு பதிலாக குறையத்தான் செய்யும்.உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weight Gain During Pregnancy

Weight Gain During Pregnancy
Story first published: Tuesday, January 23, 2018, 17:30 [IST]
Subscribe Newsletter