For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியை வேலைக்கு அனுப்பிட்டு ஆண்கள் வீட்ல என்ன செய்றாங்கன்னு தெரியுமா?...

வீட்டிலேயே இருந்துகொண்டு வேலைக்குச் செல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

By Kripa Saravanan
|

திருமணமாகியும் வேலை கிடைக்காமல் அல்லது வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றுபவர்களை பார்த்து உதவாக்கரை என்று திட்டுவோம். ஆனால் மனைவி கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள் என்பதால் அதைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஆண் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்கிற ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதை மிகப்பெரிய சமூக மாற்றமாகவே சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை வளர்க்கும் தந்தை

குழந்தை வளர்க்கும் தந்தை

வீட்டிலேயே இருந்துகொண்டு வேலைக்குச் செல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1989 ல் இருந்த எண்ணிக்கையை விட 2012 இல் கணக்கெடுத்த போது அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. 1989 இல் உலக அளவில் 1.1 மில்லியனாக இருநு்த எண்ணிக்கை 2012 இல் கிட்டதட்ட 2.4 மில்லியன் அளவாக உயர்ந்திருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நவீன காலத்தில் வீட்டில் இருந்து செய்யும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஆண், பெண் என்று எல்லா இனத்தவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை அறிந்திருக்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதிலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் தந்தையர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. ஆண் அல்லது பெண் , பெற்றோராக இருக்கும் போது அவர்களின் தொழில் முறை செயல்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும்.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியல் அலுவலகம் நடத்திய ஆய்வின் படி, வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 21.1%. பெண்களின் எண்ணிக்கை 23.6% . இதில் பெரும்பாலானோர் பெற்றோர்கள். ஆனால் அவர்களில் பலர், வீட்டில் வேலை செய்வதற்கான காரணங்கள் எவ்வளவு கஷ்டமாக இருக்கின்றன என்பதை கூறியுள்ளனர் . வீட்டில் வேலை செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கையை நோக்கி மிக சிறிய ஆராய்ச்சி புள்ளி உள்ளது

2012ம் ஆண்டு நடத்திய , பியு ஆராய்ச்சி கல்வியின் படி, வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் தந்தைகளின் எண்ணிக்கை (வீட்டில் இருந்து வேலை செய்யும் தந்தைகள் இல்லாமல் ) 1989ம் ஆண்டு 10% இருந்தது தற்போது 16% ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிகையில் 35% ஆண்கள் தங்கள் இயலாமையால் வேலைக்கு செல்வதில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் 11% ஆண்கள் மட்டுமே இதனை ஒரு காரணமாக கூறியுள்ளனர்.

2 மில்லியன் ஆண்கள்

2 மில்லியன் ஆண்கள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்களைப் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை ஓரளவுக்கு சமமாகவே உள்ளது. வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்ளும் ஆண் பெண் எண்ணிக்கையில் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. 10.4 மில்லியன் பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்கிறார்கள். அதுவே, 2 மில்லியன் ஆண்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள வீட்டில் இருக்கிறார்கள் என்பது பியு ஆய்வில் வெளிப்பட்ட செய்தியாகும்.

வீட்டில் இருந்து வேலை செய்யும் தாயும் தந்தையும் எப்படி இருக்கிறார்கள்?

தாயும் தந்தையும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள், ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இருவரும் வேறு வேறாக இருப்பார்கள். வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்ற முடிவை ஒவ்வொரு பெற்றோரும் பல்வேறு காரணத்திற்காக எடுத்திருக்கலாம், ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு இருக்கும் ஒரு தனித்தன்மை போல் இந்த முடிவும் தனித்தன்மை பெற்ற ஒன்றாக இருக்கிறது.

வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஆண்கள்

வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஆண்கள்

சில பெற்றோர் கார்ப்பரேட் நிறுவனங்களில் முழு நேர அல்லது பகுதி நேர பணியில் இருக்கலாம், சிலர் சொந்த வியாபாரத்தில் இருக்கலாம், சிலர் ப்ரீலான்சராக இருக்கலாம், வீட்டில் பகுதி நேரம் வேலை செய்யலாம், அலுவலகத்தில் பகுதி நேர வேலை செய்யலாம். இந்த பயணத்தில் அவர்கள் எப்படி இறங்கினார்கள் என்பதற்கு பல தரப்பட்ட காரணங்கள் இருக்கலாம். தங்கள் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் வீட்டில் இருக்கும் பெற்றோர் , வீட்டில் இருந்தபடி வேலை செய்வதால் கூடுதல் வருவாய் கிடைப்பதால் வாழ்க்கையை அதிகமாக அனுபவிக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளனர். சில பெற்றோகள், காயம் ஏற்பட்டு அல்லது வேறு எதாவது ஒரு காரணத்திற்காக வீட்டில் இருக்க நேரிடலாம். அதில் இருந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழல் உண்டாகி இருக்கலாம். சிலர் தாங்கள் செய்யும் தற்போதைய வேலையை கூட வீட்டில் இருந்தபடி செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.

சவால்கள்

சவால்கள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் பல வித சவால்களை சந்தித்து வருகின்றனர். கவனச்சிதறல்களை கட்டுக்குள் வைக்க வேண்டும், உற்பத்தி சார்ந்த வேலை சூழலை உருவாக்குதல், குழந்தைகளுக்கும் சரியான அளவு கவனிப்பை மேற்கொள்ளுதல் போன்றவை இவர்கள் சந்திக்கும் சவால்களாகும். இவர்கள் எப்படி வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள் ?

வீட்டில் இருந்து வேலை செய்யும் தந்தைகளின் சவால்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்யும் தாய்மார்களை விட குறைந்த எண்ணிக்கையில் தான் தந்தைகள் உள்ளனர். ஆனால், வீட்டில் மற்றும் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கு பற்றி பல்வேறு சமூக மனப்பான்மை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது

சர்வே

சர்வே

ஆண்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களின் போராட்டம் பெண்களை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கும். யு கோவ் நிறுவனம் 2015ம் ஆண்டு, 1000 அமெரிக்க இளைஞர்களை நேர்காணல் செய்தது. தாய் அல்லது தந்தை , இவர்களில் யார் வீட்டில் இருந்து குழந்தைகளை வளர்க்கலாம் என்ற கேள்விக்கு, 54% பேர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று பதிலளித்தனர். ஆனால், 38% பேர் தந்தையை விட தாய் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். வெறும் 2 % பேர் மட்டுமே தந்தை வீட்டில் இருப்பதை விரும்புகின்றனர்.

சமூக அணுகுமுறை

சமூக அணுகுமுறை

இந்த சமூகத்தின் அணுகுமுறை வீட்டில் இருந்து வேலை செய்யும் தந்தையின் தினசரி வாழ்வில் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை. ஆனால், இதே அணுகுமுறை, தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அல்லது தனது துணைக்கு இருக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது. தந்தையின் குழந்தை பேணல் தாயை விட வேறுபட்டு இருக்கும். வேறுபாடு என்பது தவறாக இருக்கும் என்பது இல்லை, இதனை பெற்றோர் இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தந்தை வீட்டில் இருந்து வேலை செய்வதால் ஒரு நன்மை உள்ளது. குழந்தை வளர்ப்பில் தாய் மற்றும் தந்தையின் ஒருங்கிணைத்த கவனம் குழந்தைக்கு கிடைக்கும். சமூக அணுகுமுறை, தந்தையின் தொழில் முறை வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கலாம்.

தனிமையும் ஈகோவும்

தனிமையும் ஈகோவும்

போஸ்டன் கல்லூரியின் வேலை மற்றும் குடும்ப மையம் கூறுவதை இப்போது பார்க்கலாம். சமூகத்தில் இருந்து தனித்து விடப்படுவது, தனது வயது ஒத்த நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போவது, எதிர்காலத்தை பற்றிய ஒரு நிச்சயம் இல்லாத தருணம், வருங்காலத்தில் திறமை படைத்த முதலாளிகளால் தாம் எப்படி உணரப்படுவோம் என்ற கவலை, போன்றவை வீட்டில் இருந்து வேலை செய்யும் பெற்றோருக்கு உண்டு. அதிலும் ஆண்கள் இவற்றை பற்றி அதிகம் கவலை கொள்ளுவார்கள். சமூகத்தில் இருந்து தனித்து விடப்படுவது மற்றும் தான் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்ற ஒரு தாழ்வுணர்ச்சி பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் உண்டு. வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்களுக்கு இந்த எண்ணம் அதிகமாக வருகிறது. இதே ஒத்த சிந்தனை உள்ள மற்ற ஆண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம், வீட்டில் இருக்கும் பெண்களுக்கான கூட்டணியில் ஒரு ஆண் இணைவதும் கடினம். அப்படி ஆண்களை பெண்கள் வரவேற்றாலும், அவர்களுடன் இணைந்து இருப்பது ஒத்து வராத விஷயமாகும். ஆகவே ஆண்கள், இந்த தனிமையை விரட்ட வேறு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

வெற்றி

வெற்றி

வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆண்கள் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும், அவர்களால் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை வாழ்வில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

?rel=0&wmode=transparent" frameborder="0">

கமலை பற்றி போட்டியாளர்களிடம் சொல்லும் சினேகன்- வீடியோ

கமலை பற்றி போட்டியாளர்களிடம் சொல்லும் சினேகன்- வீடியோ

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Understanding Work-at-Home Dads in Today's Society

The number of fathers who do not work outside the home has risen markedly in recent years, up to 2 million in 2012
Desktop Bottom Promotion