TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
குழந்தையை பிரசவிப்பது பற்றிய சில ஆச்சரியம் அளிக்கும் விஷயங்கள்.!
குழந்தையை பிரசவிப்பது என்பது எளிதான காரியம் அல்ல; ஒவ்வொரு பெண்ணும் பிரசவம் என்னும் மரண வாயிலை சந்தித்து, வெற்றிகரமாக அதை கடந்து தான் குலந்தியை பெற்று எடுக்கிறாள்; மறுபிறப்பு எடுக்கிறாள். பெண்களின் வாழ்வில் இருக்கும் முக்கியமான விஷயங்களில் இந்த பிரசவம் என்னும் நிகழ்வு தான் மறக்க முடியாதது.
பிரசவ நேரத்தில் பெண்கள் அடையும் உணர்வுகளை எந்த ஒரு கவியாலும் எழுத்தாளனாலும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது; அதை அனுபவித்து பார்க்கும் பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் உணர்வு. இந்த பதிப்பில் குழந்தையை பிரசவிப்பது பற்றிய சில ஆச்சரியம் அளிக்கும் விஷயங்கள் மற்றும் மனைவியின் பிரசவத்தை பற்றி கணவர்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி படித்து அறியலாம்.
அந்த வலி - மரண வலி!
பெண்கள் ஆசை ஆசையாய் தங்களுக்குள் உருவான கர்ப்பத்தை இரசித்து பத்து மாதங்கள் வாழ்ந்து, இந்த கர்ப்ப கால கட்டத்தின் இறுதி நாட்களை எட்டும் பொழுது கொள்ளும் பயத்திற்கு அளவே இல்லை என்றே கூறலாம். பல பெண்கள் பிரசவ வலியின் வேதனைக்கு பயந்தே குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளனர்.
ஆம் இது மிகவும் கொடிய, நீண்ட வலியை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு தான்; ஆனால் இந்த கொடிய வலியை தாங்கி கடந்து வந்தால் தான் பெண்களால் தாய்மை என்னும் மகத்துவ உணர்வை அடைய முடியும் மற்றும் குழந்தை என்னும் பொக்கிஷத்தை பெற முடியும்.
உணர்வின் அனுபவம்!
பிரசவிக்க போகும் முன் ஏற்படும் வலி, குழந்தை வெளிப்படுவதற்காக உடலில் ஏற்படும் அசௌகரிய உணர்வுகள், குழந்தையை காண போகிற சந்தோஷம் மற்றும் பிரசவத்தின் இறுதியில் குழந்தையை கண்ணார காணாமல் இறந்து விடுவோமோ என்ற பயம் போன்ற எல்லா உணர்வுகளும் பெண்ணின் மனதில் ஏற்படும்; இந்த உணர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது ஒட்டு மொத்தமாக - அவ்வப்போது என தோன்றி மறையும்.
இந்த உணர்வுகள் ஏற்படுத்தும் கலவையான ஒரு உணர்வை பெண்களால் மட்டுமே அனுபவிக்க முடியும்.
உடலின் மாற்றங்கள்!
குழந்தையை பிரசவிக்க உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படி கூறுவது? பெண்களின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக வலி உண்டாகி அதிகரிக்கும், அது உச்ச கட்டத்தை அடையும் பொழுது குழந்தை பூமியை தொடும். இந்த வலி அதிகரிக்கும் தருணத்தில், குழந்தை பிறக்கும் தருணத்தில் பெண்களின் உடலில் இருக்கும் அந்த பனிக்குடம் உடைந்து நீர்பெருக்கெடுக்கும், மாதவிடாய் ஏற்பட்டு பெண்ணின் உடலை இன்னும் கொஞ்சம் அசௌகரியப்படுத்தும். தாய்ப்பால் சுரப்புக்கான வேலைகளும் நடக்க தொடங்கும்..!
மம்மி டயப்பர்!
பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் பனிக்குட நீரை அணிந்து இருக்கும் ஆடைகளில் படாதவாறு காக்க பெண்களுக்கு மம்மி டையபப்ர் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த டையப்பரை பனிக்குட நீரை கட்டுப்படுத்த பயன்படுத்துவதற்கு பதிலாக பிரசவத்திற்கு பின் ஏற்படும் மாதவிடாயை கட்டுப்படுத்த பயன்படுத்துவது சால சிறந்தது.
அழகின் அலங்கோலம்!
கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்ணின் அழகை கூட்டவும் செய்யலாம்; குறைக்கவும் செய்யலாம். அது ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பையும் பொறுத்து மாறுபடும். பெண்களின் அழகு என்று சொல்லும் பொழுது, அழகின் மணிமுடியாக திகழ்வது பெண்கள் தலையில் கொண்டு இருக்கும் கூந்தல் தான். அந்த கூந்தல் பிரசவாத்தின் விளைவாக அதிகம் உதிர்ந்து அலங்கோல நிலையை அடையும் என்பது மறுக்க முடியாத உண்மை!
பாதங்களின் வலி!
பாதங்கள் கர்ப்ப மற்றும் பிரசவ காலத்தில் அதிகம் மாறுதல் அடையும்; இந்த மாறுதல் பெண்களின் பாதங்களை பெரிதாக வீங்க செய்யும். இந்த வீக்கத்தின் விளைவாக பெண்கள் கர்ப்பம் காரணமாக நிகழும் வேதனைகளை சகித்து கொள்வதோடு, இந்த வேதனையையும் சகிக்க நேரிடும். மேலும் பெண்கள் பிரசவத்தின் பொழுது அடையும் வேதனை மற்றும் வலிகள், உடலில் கர்ப்பத்தின் போதே ஏற்பட்ட இந்த வலிகளால் மேலும் பெரிதாகும்.
இரவு முடியாது..!
பெண்கள் கர்ப்பம் தரித்த நொடி முதலே வாந்தி, குமட்டல், மயக்கம் என்று காணாமல் போகும் உறக்கம், கர்ப்ப காலம் முழுதும் பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்களால் நீடித்து கொண்டே இருக்கும். பெண்கள் பிரசவம் என்னும் நிலையை எட்டிய பின்னும் கூட உறக்கம் சரிவர கிடைக்காது. சரி பிரசவத்திற்கு பின்னாவது பெண்களால் உறங்க முடியுமா என்றால் அதுவும் நடக்கத்து; ஏனெனில் பெற்ற குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பெண்களை உறங்க விடாது.
இந்த உறக்கத்தோடு, பெண்களின் இரவை முடியாத நீண்ட இரவாக மாற்றும் மற்றொரு விஷயம் வியர்வை. கர்ப்ப காலத்தில் தொடங்கி பிரசவம் வரை பெண்களுக்கு இரவில் அதிகம் வியர்த்து கொட்டும்.