Latest Updates
-
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க!
பிரசவத்தின் பொழுது பெண்கள் மலம் கழித்துவிட்டால் ஆபத்தா? எப்படி தடுப்பது?
பெண்களின் இந்த கஷ்டமான பிரசவ சமயத்தில், அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வண்ணம் குழந்தை பிறப்பு நிகழும் பொழுது மலம் வெளிப்பட்டு விட்டால் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தா? அதை எப்படி தடுப்பது? போன்ற
பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு என்று சொல்லப்படுகிறது; பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இறந்து மீண்டும் ஜனிக்கும் தருணமாக பிரசவம் கருதப்படுகிறது. இது ஏன் இவ்வாறு கருதப்படுகிறது என்று யோசித்து பார்த்தால், இதற்கு குழந்தை எப்படி வெளிப்படுகிறது என்பதை முதலில் நாம் உற்று நோக்க வேண்டும். 3-4 கிலோ எடை கொண்ட குழந்தை தாயின் சிறு பிறப்புறுப்பு வழியாக எப்படி வெளிவருகிறது?

குழந்தையை முழுமையாக வெளியேற்ற தாயின் இடுப்பெலும்புகள் விரிந்து, சதை கிழிந்து - இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு தான் குழந்தையை பெற்று எடுக்கின்றனர் பெண்கள்! பெண்களின் இந்த கஷ்டமான பிரசவ சமயத்தில், அவர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வண்ணம் குழந்தை பிறப்பு நிகழும் பொழுது மலம் வெளிப்பட்டு விட்டால் தாய்க்கும் சேய்க்கும் மிகவும் ஆபத்தா? அதை எப்படி தடுப்பது? போன்ற விஷயங்கள் குறித்து இந்த பதிப்பில் படிக்கலாம்.

ஏன் மலம் வெளிப்படுகிறது?
பிரசவத்தின் பொழுது, அதிலும் சுகப்பிரசவத்தை பொழுது பெண்கள் குழந்தையை வயிற்றிலிருந்து வெளியேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்த அழுத்தம் வெளியில் இருந்து கொடுக்கப்படுவதல்ல; பெண்கள் உடலின் உள்ளிருந்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி அழுத்தம் கொடுக்கும் பொழுது குழந்தைகள் பிறப்புறுப்பு வாய் வழியாக வெளிப்படுவர்; இந்த சமயத்தில் பெண்கள் உள்ளிருந்து கொடுக்கும் அழுத்தம் வயிறு மற்றும் வயிறை சுற்றிய பகுதிகளில் ஏற்படும். இதனால், வயிற்றிற்கு அருகில் அமைந்துள்ள மலக்குடலில் அழுத்தம் ஏற்பட்டு மலம் வெளிப்படுகிறது.
இந்த அழுத்தம் மட்டும் அல்லாமல், பிரசவத்தின் பொழுது தாயின் உடலில் சுரக்கப்படும் ப்ரோஸ்டாகிளாண்டின்ஸ் எனும் ஹார்மோன் பெண்களின் உடலில் குழந்தையை வெளியேறத் தூண்டுவதுடன், மலம் வெளியேறவும் தூண்டுகிறது. இந்த காரணங்களால் தான் பெண்களின் பிரசவத்தின் பொழுது மலம் வெளிப்படுகிறது; இஇதை எண்ணி பயம் கொள்ள வேண்டியதில்லை.

எபிடியூரல் காரணமா?
சுகப்பிரசவத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்தோம்; இதுவே சிசேரியன் பிரசவத்தில் எபிடியூரல் எனும் மயக்க ஊசி போட்டு பெண்ணின் உடலை மரத்து போகச் செய்துவிடுகின்றனர். ஆகையால் பெண்களுக்கு அந்த சமயத்தில் தங்கள் உடலில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும்; அதனால், உடலின் ஹார்மோன் நடத்தும் மாற்றங்களால் பெண்ணின் உடலில் இருந்து மலம் வெளிப்பட்டாலும் பெண்ணுக்கு அந்த சமயத்தில் அது தெரியாது; பிரசவம் முடிந்து சுய நினைவு வரும் பொழுது தான் தெரியும். ஆகவே, பிரசவத்தின் பொழுது மலம் வெளிப்பட எபிடியூரல் காரணமல்ல.
இப்பொழுது பிரசவத்தின் பொழுது மலம் வெளிப்படுவதை தடுப்பது எப்படி என்று இங்கு படிக்கலாம்.

எனிமா
பிரசவத்திற்கு முன் பெண்கள் தங்கள் உடலில் மலம் சேர்ந்திருக்கும் என்று எண்ணினால், மலம் வெளிப்படும் என்று தோன்றினால் எனிமாவை மருத்துவர்கள் அனுமதியுடன் எடுத்துக் கொண்டு பிரசவம் நடக்கும் முன்னரே தன் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றி விட வேண்டும்; இவ்வாறு செய்வது பிரசவத்தின் பொழுது மலம் வெளிப்படாமல் தடுக்கும்.

மலம் கழித்து விடவும்!
அவரவர் உடலை பற்றி அவரவருக்கு தான் தெரியும்; எனவே உங்கள் உடலில் மலம் சேர்ந்திருக்கும் என்று தோன்றினால், அதை எந்தவித உதவியும் இன்றி உங்களாலேயே வெளிப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், நீங்களே சென்று பிரசவத்திற்கு முன் இருக்கும் அனைத்து மலம் முழுவதுமாக வெளியேறும் வண்ணம் மலம் கழித்து விட்டு பின் பிரசவத்தை மேற்கொள்ள செல்லவும்.

சூப்பர்சிஸ்டோரி
சூப்பர்சிஸ்டோரி எனும் முறையில் எப்படி வாக்கும் டுயூப் மூலம் நண்பன் படத்தில் குழந்தையை எடுத்தார்களோ அதே போல், பெண்ணின் உடலில் இருந்து மலத்தை எடுக்க பயன்படுத்தப்படும் முறை தான் இது. கர்ப்ப காலத்தில் சுரக்கப்பட்ட ஹார்மோன் அல்லது பொதுவான உடல் காரணங்கள் காரணமாக பெண்களின் உடலில் மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால் அந்த சமயத்தில் மலம் கழிப்பது என்பது சவாலான விஷயமாக இருக்கும். எனவே அந்த சமயத்தில் இந்த முறையை பின்பற்றலாம்.

உணவுகள்
பிரசவம் நெருங்கும் சமயத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவுகளை, மலம் கழிப்பதை தூண்டும் உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும்; உண்ணும் உணவுகளில் நன்கு கவனம் செலுத்தி முடிந்த அளவுக்கு நீராகாரங்களாக உட்கொள்ள முயற்சிக்கலாம். இது குறித்து ஒருமுறை மருத்துவருடன் ஆலோசனை செய்து அவர் பரிந்துரைக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். பழச்சாறு, சூப் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

டயட் - கவனம்!
பின்னாளில் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை முன்னரே திட்டமிட்டு, கர்ப்பகாலம் தொடங்கிய நாள் முதல் உங்களுக்கு மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை உட்கொள்ள முயலுங்கள்! மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் உணவுகள் உண்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்!

செவிலியர்கள் பாவம்!
பிரசவத்தின் பொழுது குழந்தை வெளிப்படும் பொழுது ஏற்படும் மாதவிடாய் இரத்தத்தை தூய்மை செய்வதே செவிலியர்கள் தான்! அதற்கே நாம் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும். அப்படிப்பட்ட அவர்களுக்கு மேலும் கஷ்டம் கொடுக்கும் வகையில் மலம் கழித்து, அவர்களை மேலும் கஷ்டப்படுத்த வேண்டும். ஆகையால் மலம் வெளிப்படாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டு குறைந்த கஷ்டங்களுடன் கொழுகொழு குழந்தையை பெற்று எடுத்து நலமாக வாழுங்கள்! வாழ்க வளமுடன்!



Click it and Unblock the Notifications