தந்தை ஆகப்போகும் ஆண்கள் இதை எல்லாம் கட்டாயம் செய்யனும்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

தாய்மை என்பது பெண்களுக்கு எப்படி சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதே போல் தான் ஆண்களுக்கும். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை கணவன் தான் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் சில ஆண்களுக்கு தன் மனைவி மீது அதீத அன்பு பாசம் ஆகியவை இருந்தாலும், அதை எப்படி செயலில் காட்டுவது, தன் மனைவியை எப்படி எல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. இது போன்ற சந்தேகங்கள் உள்ள ஆண்களுக்கு இந்த பகுதி உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரசவம் சம்மந்தமான புத்தகங்கள்

பிரசவம் சம்மந்தமான புத்தகங்கள்

நிறைய ஆண்களுக்கு கர்ப்ப காலம் பற்றி தெரியாது. உங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரசவம் சம்மந்தப்பட்ட புத்தகங்களை படியுங்கள். இதில் நீங்கள் அறியாத பல விஷயங்கள் இருக்கும்.

தொடர்பு கொள்ளும் படி இருங்கள்

தொடர்பு கொள்ளும் படி இருங்கள்

உங்கள் மனைவிக்கு எந்த நேரத்திலும் ஏதேனும் வலி அல்லது தேவைகள் ஏற்படலாம். பிரசவ காலத்தை நெருங்கும் பெண்களுக்கு எந்த நேரத்திலும் பிரசவ வலி உண்டாகலாம். எனவே அருகில் இல்லாவிட்டாலும் கூட போனிலாவது தொடர்பு கொள்ளும் படி இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவரிடம் அழைத்து செல்லுதல்

மருத்துவரிடம் அழைத்து செல்லுதல்

மருத்துவர் பரிசோதனைகளுக்காக வர சொன்ன தேதியில் சொன்ன நேரத்தில் உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம். உங்களது சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு விடை பெறுங்கள்.

கர்ப்ப கால உடை

கர்ப்ப கால உடை

ஷாப்பிங் செல்வது என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் மனைவியை ஷாப்பிங் அழைத்து சென்று அவருக்கு கர்ப்ப காலத்தில் வசதியாக இருக்க கூடிய ஆடைகளை வாங்கி கொடுங்கள்.

விருப்பப்பட்டதை செய்யுங்கள்

விருப்பப்பட்டதை செய்யுங்கள்

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அவர் என்னென்ன விரும்புகிறாரோ அதை எல்லாம் செய்யுங்கள். பிடித்த இடம், அம்மா வீடு என்று அழைத்து என்று மனைவியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

புத்தகம் எழுதலாமே!

புத்தகம் எழுதலாமே!

உங்கள் மனைவியின் கர்ப்ப காலம் தொடங்கி என்னென்ன மாற்றங்கள், வலிகள், மன மாற்றங்கள், மகிழ்ச்சிகள் அந்த பத்து மாதத்தில் ஏற்பட்டது என ஒரு புத்தகமாக எழுதி, குழந்தை பிறந்த உடன் உங்கள் மனைவிக்கு பரிசளியுங்கள். அது அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Every dad should do these things

Here are the things that every dad should do
Story first published: Friday, June 23, 2017, 10:48 [IST]
Subscribe Newsletter