கர்ப்ப காலத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ கூட இந்த விஷயங்களை எல்லாம் செய்துவிடாதீர்கள்!

Written By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய வரமாகும். இந்த கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டியது அவசியம், மற்றும் ஒரு சில விஷயங்களை முக்கியமாக செய்ய கூடாது.

மேலும் கர்ப்ப காலம் என்று வந்துவிட்டாலே, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என ஆள் ஆளுக்கு ஒவ்வொரு அறிவுரைகளை கூறுவார்கள். இறுதியில் நீங்கள் குழம்பி தவிப்பது தான் மிச்சமாகும். கர்ப்ப காலத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்ற ஒரு குழப்பம் அனைவருக்குமே இருக்கும். அந்த குழப்பங்களை போக்குவதற்காக தான் இந்த பகுதி.. கர்ப்ப காலத்தில் என்னென்ன விஷயங்களை செய்ய கூடாது என்பது பற்றி இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீயபழக்கங்கள்

தீயபழக்கங்கள்

இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. கர்ப்ப காலத்தில் புகை பிடித்தல், மது அருந்துதல் என இருந்தால், அது குழந்தையை பாதிக்கும். குழந்தைகள் உடல் ஊனமுற்றோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டோ பிறக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகள், நடத்தை பிரச்சனைகள், குறைவான பிறப்பு எடை மற்றும் போதிய வளர்ச்சி இல்லாமை ஆகியவை ஏற்படும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றை கைவிட வேண்டுமெனில், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்.

பூனையின் கழிவு

பூனையின் கழிவு

இது சற்றே விசித்திரமாக இருக்கலாம். இது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களிடம் பூனை இருந்தால் அதன் கழிவுகளை நீங்கள் சுத்தம் செய்ய கூடாது. ஏனெனில், அதில் அதிகளவு பாக்டீரியாக்கள் உள்ளது. குறிப்பாக, டோக்ஸோபிளாஸ்மா கான்டி என்ற ஒட்டுண்ணி ஒன்று உள்ளது. உடல் உபாதைகள் தீவிரமாகும் வரை, உங்களுக்கு அதனால் பாதிக்கப்பட்டிருப்பதே தெரியாது. இதனால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிக காஃபின்

அதிக காஃபின்

காஃபின் நஞ்சுக்கொடியின் வழியாக குழந்தைக்குள் ஊடுருவி, குழந்தையின் இதய துடிப்பை பாதிக்கும். இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். எந்த அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்காக நீங்கள் முற்றிலுமாக காஃபினை தவிர்க்க வேண்டும் என்றில்லை. ஒரு நாளைக்கு 200மிலி குறைவாக பருக வேண்டும். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், தவறுதலாக நீங்கள் அதிகளவு காஃபின் உட்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கர்ப்ப கால ஃபேஷன்

கர்ப்ப கால ஃபேஷன்

கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்களது உடலின் வளர்ச்சி அதிகரித்திருக்கும். நீங்கள் முன்பு அணிந்திருந்த உடைகள் தற்போது உங்களுக்கு சரியாக இருக்காது. எனவே நீங்கள் புதிய இலகுவான உடைகளை வாங்கி பயன்படுத்துங்கள். கர்ப்ப கால உடைகள் முன்பு போல இல்லை.. இப்போது ஃபேஷனாகவும் டிரெண்டியாகவும் உள்ளது. எனவே இந்த உடைகள் நீங்கள் கர்ப்ப காலத்தில் அழகாக வளம் வர உதவியாக இருக்கும்.

செருப்புகள்

செருப்புகள்

நீங்கள் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை அணியும் ஆர்வம் உடையவர்களாக இருந்தால், இதனை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் ஹீல்ஸ் செருப்புகள் அவ்வளவு சரியான தேர்வாக இருக்க முடியாது. எனவே தரையோடு தரையாக இருக்கும் ஃபிளாட் செருப்புகளையே பயன்படுத்துங்கள்.

மருந்துகள்

மருந்துகள்

மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீங்கள் மருந்துகளை உட்க்கொள்வதை தடுக்க வேண்டியது அவசியம். காய்ச்சலாக இருக்கிறது.. தலைவலிக்கிறது. ஜீரண பிரச்சனை இருக்கிறது என்று எல்லாம் நீங்களே ஏதாவது ஒரு மருந்தை எடுத்துக் கொள்வது கூடாது.

உடலுறவு

உடலுறவு

எப்போது வரை உங்கள் மருத்துவர், உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறாரோ அது வரை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. எதற்கும் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

குப்புறப்படுக்க கூடாது

குப்புறப்படுக்க கூடாது

நீங்கள் குழந்தை வளர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், குப்புறப்படுக்கவே கூடாது. இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகும். ரத்தம் ஓட்டம் தடையாகவும் வாய்ப்புகள் உள்ளது.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

நீங்கள் மருத்துவர் குறிப்பிட்டு கொடுத்த நாட்களில் எல்லாம், மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியமாகும். அவர் செய்ய சொல்லும் பரிசோதனைகளை செய்வதன் மூலமாக, குழந்தையின் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை குழந்தை ஆபத்தான சூழ்நிலையில் இருந்தாலும் கூட, அதனை சரி செய்து விடலாம். எனவே மருத்துவர் சந்திப்பையும், பரிசோதனைகளையும் தவறாமல் செய்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருக்க கூடாது!

சாப்பிடாமல் இருக்க கூடாது!

நீங்கள் கர்ப்ப காலத்தில் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க கூடாது. விரதம் இருப்பது, டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் நீண்ட நேரம் இருப்பது இவைகள் எல்லாம் உங்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் ஒன்றாக இருக்கும். குழந்தையின் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க இது உதவியாக இருக்கும். எனவே நீங்கள் வெளியில் செல்லும் போது கூட ஒரு பிஸ்கட் பாக்கெட்டையாவது உடன் எடுத்து செல்லுங்கள்.

இது கூடாது

இது கூடாது

ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு சில சமயங்களில் ஆபத்துக்கள் நிறைந்த விளையாட்டுகளை விளையாடும் போது கீழே விழுந்து அடிபட கூடும். எனவே இவற்றை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஒரு காலத்தில், உங்களின் இதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 140 மேல் இருந்தால், குழந்தையின் உடல் சூட்டை அதிகரிக்கும் என நம்பப்பட்டது. அதனால், கர்ப்பிணிகள் வேலை செய்யவே மாட்டார்கள். ஆனால் இன்றோ, மருத்துவர்கள் கர்ப்பிணிகள் உடற்பயிற்சி, குறிப்பாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். இது தாய் மற்றும் சேய் இருவரின் உடல் நலத்திற்கும் நல்லது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பயிற்சி, தூக்கமின்மை போன்றவற்றிக்கு இது ஒரு சிறந்த நிவாரணம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do Not Do These Things During Pregnancy

Do Not Do These Things During Pregnancy
Story first published: Monday, December 18, 2017, 16:40 [IST]