For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொண்டால் கருச்சிதைவு உண்டாகுமா?

கர்ப்ப காலத்தில் மருத்துவர் அனுமதியின்றி ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் கருச்சிதைவு உண்டாகுமா என நடந்த ஆய்வைப் பற்றியது இக்கட்டுரை.

By Arunkumar P.m
|

பெண்கள் கர்ப்பகாலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்கின்றனர். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதுதாக புதிதாய் வந்துள்ள ஒரு ஆய்வு சொல்கிறது.

மேக்ரோலைட்ஸ், ,குயினோலோன்ஸ் ,டெட்ராசைக்ளின்ஸ், சல்போனோமைட்ஸ் மற்றும் மெட்ரோனிடசோல்ஸ் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் பெண்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது .

Antibiotics Increase The Risk Of Miscarriage- A study reveals!

கர்ப்பகாலத்தின் நோய்த்தொற்று ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இந்த கருத்தை கனடா நாட்டின் கியூபெக் மஹானத்தில் உள்ள மான்ரியல் மருத்துவ பல்கலைக்கழத்தை சார்ந்த அனிக் பேரார்ட் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மேலும், சில வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் கருச்சிதைவு பாதிப்பு 60 % வரை இருமடங்காக உயர்த்தும் தன்மை கொண்டது என்ற கருத்தை பதிவுசெய்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

கனடா மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை இந்த ஆராய்ச்சியில் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. மருத்துவ முறையில் கண்டுபிடிக்க பட்ட கருக்கலைப்பு நோயாளிகள் சுமார் 8702 பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் அதிகம் உடல் உபாதைகள் கொண்ட வயதான பெண்கள் கருசிதைவினால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு நீர் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் :

சிறு நீர் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் :

எரித்ரோமைசின் மற்றும் நைட்ரோபுரோண்டாவின் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் கர்பகாலத்தில் சிறுநீர்த் தடத் தொற்று நோய்க்கு தீர்வாக உபயோகப்படுத்தப்படுகிறது .

இந்த மருந்துகளினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் இல்லையென்ற கருத்தை அந்த ஆய்வு சொல்கிறது . ஆனால் பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றின் கடும் தன்மையை பொருத்து கருச்சிதைவு ஏற்படும் என்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

கவனமாக இருக்க வேண்டும் :

கவனமாக இருக்க வேண்டும் :

எதிர்பாராமல் நிகழும் கருச்சிதைவே 30% வரை வாய்ப்புள்ளதால் ,நோய்த்தொற்றின் தன்மை மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஆனால் அதிகப்படியான கருச்சிதைவு அனைத்து ஆன்டிபயோட்டிக் மருந்துகளினாலும் ஏற்படப்போவதில்லை.இந்த செய்தி நோயாளிகளுக்கும் மருத்துவ சமுதாயத்திற்கும் நல்ல செய்தியாக வந்துசேர்ந்துள்ளது.

ஆராய்ச்சி முடிவு :

ஆராய்ச்சி முடிவு :

இந்த ஆராச்சியின் முடிவுகள் மருத்துவம் சார்ந்த கொள்கைமுடிவு எடுப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சை தீர்வுகளை மேம்படுத்த இந்த ஆராய்ச்சி உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Antibiotics Increase The Risk Of Miscarriage- A study reveals!

Antibiotics Increase The Risk Of Miscarriage- A study reveals!
Story first published: Tuesday, May 23, 2017, 13:11 [IST]
Desktop Bottom Promotion