கர்ப்பமாக இருக்கும் போது சோடா பருகினால் என்னவாகும் தெரியுமா?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

சோடா வகைகள் செயற்கையாக நிறமூட்டப்படுகின்றன. இவை இயற்கையான பழங்களால் செய்யப்படக்கூடையவை அல்ல. மேலும், சோடா வகைகள் உடலுக்கு சூட்டை தருவதாகவும், உடல் எடையை அதிகரிக்க செய்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி தற்போதைய ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் சோடா பருகுவதால், குழந்தையின் உடல் எடை அளவுக்கு அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பற்றி விரிவாக இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

டென்மார்க்கில் 96,000 பெண்களை வைத்து நீண்ட நாட்களாக நடத்திய ஆராய்ச்சியில், பெண்கள் கர்ப்பமான பிறகு ஆறு மாதத்தில் என்னென்ன சாப்பிட்டார்கள், அவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது பற்றி கண்காணித்தனர். இதில் சோடா பருகிய பெண்களின் குழந்தைகளின் உடல் எடையை அவர்களது 7 வயதில் கணக்கிட்ட போது அந்த குழந்தைகள் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் பருகுதல்

தினமும் பருகுதல்

ஆய்வில் இடம்பெற்ற 9% பெண்கள் தினமும் சோடாக்களை பருகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகும் தாய்மார்களுடன் ஒப்பிடும் போது, தினமும் சோடா பருகும் பெண்களின் பிரசவம் சிரமமாக இருக்க 60% வாய்ப்புகள் இருக்கிறதாம்.

செயற்கை பொருட்கள்

செயற்கை பொருட்கள்

சோடாக்களில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்களால் உடல் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்படுவதோடு, உடல் பருமனும் அதிகரிக்கிறது.

அதிகரிக்கும் சக்கரை அளவு

அதிகரிக்கும் சக்கரை அளவு

சோடாக்களில் சேர்க்கப்படும் செயற்கை சக்கரை உடலில் உள்ள இரத்த சக்கரையின் அளவை அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய் வரவும் காரணமாக இருக்கிறது.

ஜிரோ கலோரி

ஜிரோ கலோரி

சோடாக்களில் உள்ள ஜிரோ கலோரியால் உடல் எடை எளிதாக அதிகரித்துவிடுகிறது. உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

causes of drinking soda during pregnancy

here are the some causes of drinking soda during pregnancy
Story first published: Monday, July 10, 2017, 16:26 [IST]