For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தை கோலாகலமாக கொண்டாடும் உலகில் உள்ள சில வளைகாப்பு சடங்குகள்!!!

By Ashok CR
|

கர்ப்பம் என்பது பெரும்பாலும் அனைத்து பெண்களுக்குமே கனவு நனவாவதை போல. ஒரு பெண் கர்ப்பமாகும் போது தான் அவள் முழுமை அடைகிறாள். கர்ப்பம் என்பது கொண்டாட்டத்திற்கான காலமாகும்; அதுவும் கர்ப்பமான பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த குடும்பத்திற்குமே. பல்வேறு சடங்குகளுடன் தாய்மை என்னும் அழகிய பயணத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும் அதனை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள்.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?

இந்த சடங்குகள் எல்லாம் வெறும் பாரம்பரிய குறிப்பு மட்டுமல்ல, மாறாக தாயாக போகும் ஒரு பெண்ணிற்கு நாம் காட்டப்போகும் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தும். இப்போது உலகத்தில் உள்ள சில குடும்பத்திற்குள் நுழைந்து, குழந்தை வரப்போவதை அவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியா

இந்தியா

கிட்டத்தட்ட வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் இந்திய சடங்குகள் அடங்கியுள்ளது. அதனால் கர்ப்ப காலத்தின் போது சடங்குகள் நடைபெறுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. வரப்போகும் குழந்தையின் பிறப்பை முன்னிட்டு இந்திய பெண்கள் விரிவான சடங்குகளை கொண்டாடுவார்கள். இந்தியா ஒரு மிகப்பெரிய நாடாகும். இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் கர்ப்பத்தை ஒவ்வொரு மாதிரி கொண்டாடுகிறார்கள். அவையாவன:

வட இந்தியா

வட இந்தியா

வட இந்தியாவில், இந்த சடங்கை 'கோத் பாரை' என அழைக்கிறார்கள். விளையாட்டுக்கள், அருமையான உணவுகள் மற்றும் பரிசுகள் என விழா கோலாகலமாக நடைபெறும். அதிலும் மகாராஷ்டிராவில், இந்த சடங்கை டோஹால் ஜெவான் என அழைப்பார்கள். இது கர்ப்பத்தை கொண்டாடும் சடங்காகும்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில், குழந்தையை வரவேற்கும் நிகழ்வை ஷாத் என அழைப்பார்கள். 'ஷாத்' என்றால் 'விருப்பம்' அல்லது 'ஆசை' என பொருளாகும். இந்த சடங்கின் போது, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் விரும்பும் உணவுகள் அவர்களுக்கு சமைத்து கொடுக்கப்படும்.

தென் இந்தியா

தென் இந்தியா

தென் இந்தியாவில், இந்த கொண்டாட்டம் விரிவான சடங்குகளோடு நடைபெறும். இதற்கு சீமந்தம், புளிகுடி அல்லது வளைகாப்பு என பல்வேறு பெயர்கள் உள்ளது. இந்த நிகழ்வு கர்ப்பமான 5, 7 அல்லது 9 வது மாதத்தில் நடைபெறும். இந்த அனைத்து சடங்குகளிலும், பாரம்பரிய உடைகளை கர்ப்பிணி பெண்கள் அணிந்து கொள்வார்கள். அவர்களுக்கு பரிசுகள் வந்து குவியும். இந்த நிகழ்வை சிறப்பிக்க கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்படும். கர்ப்பிணிப் பெண்களை வாழ்த்தவும், ஆரோக்கியமாக குழந்தையை அந்த பெண் பெற்றெடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யவும் சொந்தங்களும், நண்பர்களும் இந்த விழாவிற்கு வருகை தருவார்கள்.

சீனா

சீனா

சீனாவில் கர்ப்பிணி பெண்களும் அவர்களின் குடும்பங்களும் சீன தெய்வங்களான 'போதிசத்வா குவான்'யின் (கருணைக் கடவுள்) மற்றும் ஜின் ஹுவா ஃபு ரென் (தங்க மலரான பெண்) ஆகியோர்களை வழிபடுவார்கள். தாய் மற்றும் சிசுவின் பாதுகாப்பிற்காகவே இந்த வேண்டுதல்கள்.

பிரேசில்

பிரேசில்

‘ச டி பேப்' (குழந்தை தேநீர்) என்ற விருந்து கர்ப்பத்தை கொண்டாடுவதற்காகும். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுகள் அளித்து, பெரிய விருந்தே அளிக்கப்படும்.

ஈரான்

ஈரான்

சிஸ்மூனி விருந்து என்பது குடும்ப சடங்காகும். குழந்தை பிறப்பதற்கு ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன் இந்த விருந்து நடைபெறும். கர்ப்பிணி பெண்ணின் குடும்பமும் நண்பர்களும், பிறக்க போகும் குழந்தைக்கு பரிசுகளை கொண்டு வருவார்கள். குதூகலம் நிறைந்த நிகழ்வாக அமையும் இது.

தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா

இங்கே ஸ்டோர்க் விருந்து என்பது கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் ஆகும் போது கொண்டாடப்படும். பெண்கள் மட்டுமே பங்கு பெறும் இந்த விருந்தின் போதும் பரிசுகள், கேளிக்கைகள் மற்றும் குதூகலங்கள் நிறைந்திருக்கும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

மேற்கத்திய நாடுகளில் வளைகாப்பு விழா மூலமாக கர்ப்பிணி பெண்களை தாங்குவது புகழ் பெற்ற முறையாகும். வரப்போகும் குழந்தைக்கும், அதனை சுமக்கும் தாய்க்கும் விருந்தினர்கள் பரிசுகளை கொண்டு வருவார்கள். புதிய தாய்க்கு வளைகாப்பு விழாவை அவளுடைய குடும்பமும் நண்பர்களும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதத்தில் ஏற்பாடு செய்வார்கள். வளைகாப்பு தோன்றியதே பிறக்க போகும் குழந்தைக்கு, அதற்கு தேவையான பொருட்களை இந்த விழாவின் மூலம் சேகரிப்பதற்காக தான். வரப்போகும் குழந்தையின் பெற்றோருக்கு நிதிச்சுமையைக் குறைப்பதற்கு இந்த முறை கையாளப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fun Family Rituals To Celebrate Pregnancy

Pregnancy is a dream come true for most women. It is the time when a girl truly becomes a woman. It is a time for celebration, not just for you but also for your entire family.
Desktop Bottom Promotion