Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கர்ப்பிணிகளே! பிரசவம் முடியும் வரை இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிடாதீங்க...
கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும். ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய காய்கறிகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றில் கவனமாக இருந்தால், அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும்.
எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் அளவுக்கு அதிகம் நிறைந்துள்ளது. அதற்காக வைட்டமின் உணவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடாது.

கத்திரிக்காய்
கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

வெந்தயக் கீரை
கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

பசலைக் கீரை
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

ப்ராக்கோலி
கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு தான் தீர்வாகும்.

காலிஃப்ளவர்
கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

பீட்ரூட்
வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து அதிக்ம் நிறைந்துள்ள பீட்ரூட்டை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல. மேலும் பீட்ரூட் உடலில் வெப்பத்தை அதிகரிப்பதால், இதனை உட்கொண்மால், இரத்தக்கசிவை ஏற்படுத்தும். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.

குடைமிளகாய்
குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!

கேல்
கீரைகளில் ஒன்றான கேல் கீரையை கர்ப்பத்தின் போது சாப்பிட ஆசைப்பட்டால், ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது கருவிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

மிளகாய்
கர்ப்பத்தின் போது பெண்கள் நிச்சயம் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது சில சமயங்களில் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.



Click it and Unblock the Notifications