Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய சில வலிகள்!!!
அனைத்து கர்ப்பிணிகளும் பயப்படும் ஒரே வலி என்றால் அது பிரசவ வலி தான். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இருந்தே, கர்ப்பிணிகள் பல்வேறு வலிகளை சந்திக்ககூடும். அத்தகயை வலிகள் அனைத்து கடுமையாகவும், தொந்தரவு தரக்கூடியதாகவும் இருக்கும். இந்த மாதிரியான வலிகளுக்கு பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான வலிகளைக் கொடுக்கும்.
சொல்லப்போனால், இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் கடுமையானதாக இருக்கும். எனவே கர்ப்பமாக விரும்புபவர்கள், அத்தகைய வலிகள் என்னவென்று முன்பே தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல், தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

முதுகு வலி
கர்ப்பம் மற்றும் முதுகு வலிக்கு நிறைய சம்பந்தம் இருக்கும். ஆம், கர்ப்பத்தின் ஒவ்வொரு நிலையின் போதும், குழந்தை வளர்ச்சியடைவதால், வயிறானது பெரிதாக பெரிதாக, அதனை தாங்கும் முதுகில் வலியானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இத்தகைய வலியை பிரசவம் முடியும் வரை சந்திக்கக்கூடும்.

தலை வலி
முதல் மூன்று மாதத்தில் அடிக்கடி தலை வலியானது ஏற்படும். அதிலும் மதிய நேரத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மதிய வேளையில் கர்ப்பிணிகளின் உடலில் சர்க்கரையின் அளவானது குறைவதால், தலைவலியானது ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய அவ்வப்போது இனிப்புகளை சாப்பிட்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

கால் வலி
கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மிகவும் மோசமான வலி என்றால் அது கால் வலி தான். இத்தகைய கால் வலியின் ஆரம்பத்தில் அடிக்கடி கால்களில் பிடிப்புகள் ஏற்படும். பின் உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்களில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

பாத வலி
கர்ப்பிணிகளுக்கு பாதங்கள் வீங்குவது என்பது பொதுவானது. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது நீரானது பாதங்களில் அதிகம் தங்குவதால், அவை பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இக்காலத்தில் இரத்த ஓட்டமானது பாதி உடலுக்கு மட்டும் தான் ஓடும். இதனால் அந்த வலியானது நடக்க முடியாமல் செய்வதோடு, எப்போதும் ஓய்வு எடுக்கத் தூண்டும்.

அடிவயிற்று பிடிப்பு
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அடிவயிற்றில் பிடிப்புக்கள் ஏற்படும். ஏனெனில் இக்காலத்தில் கருப்பையானது விரிவடைவதால், அடிவயிற்றில் பிடிப்புடன் கூடிய வலி ஏற்படும்.
இவையே கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் அனுபவிக்கக்கூடிய வலிகள். நீங்கள் வேறு ஏதாவது வலியை அனுபவித்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications