For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் தவறாமல் சாப்பிட வேண்டிய வைட்டமின் உணவுகள்!!!

By Maha
|

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் இன்றியமையாதது. என்ன தான் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்தாலும், கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அதிலும் கர்ப்பிணிகள் 5 வகையான வைட்டமின்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளில் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் டி, குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஈ மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குறைபிரசவம் போன்றவற்றை தவிர்க்க வைட்டமின் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சரி, இப்போது இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தெளிவாக கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வந்து, நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் காலையில் எழுந்ததும், நன்கு காய்ச்சப்பட்ட பாலை பருகுவது மிகவும் நல்லது.

பூசணிக்காய்

பூசணிக்காய்

பூசணிக்காயை அளவான காரத்தில் சமைத்து, சாப்பிட்டு வந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டை

முட்டை

வாரத்திற்கு ஒரு முறை முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், கருவிற்கு நல்ல அளவில் வைட்டமின் ஏ கிடைக்கும்.

கேரட்

கேரட்

கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக கேரட்டை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தோ வருவது நல்லது.

ஆட்டு ஈரல்

ஆட்டு ஈரல்

ஆட்டு ஈரலை நன்கு வேக வைத்து, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. ஏனெனில் இதிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

கர்ப்பிணிகள் அவ்வப்போது ஸ்ட்ராபெர்ரியை மில்க்ஷேக் போன்றோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தாலோ, அதில் உள்ள வைட்டமின் சி சத்தை நன்கு பெறலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பது அனைவருக்கு நன்கு அறிந்த விஷயமே. எனவே தவறாமல் இந்த பழத்தை சாப்பிடுவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ள வேண்டும்.

தக்காளி

தக்காளி

பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படும் தக்காளியை, கர்ப்பிணிகள் தூக்கி எறியக்கூடாது. ஏனெனில் அதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

சிலருக்கு குடைமிளகாய் மிகவும் பிடிக்கும். அவ்வாறு குடைமிளகாய் சாப்பிடுவதாக இருந்தால், சிவப்பு நிற குடைமிளகாயை வாங்கி சாப்பிடுங்கள்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்பிணிகள் முட்டையை நன்கு வேக வைத்து, மஞ்சள் கருவை சாப்பிடுவது, குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இறைச்சி

இறைச்சி

கர்ப்பிணிகள் அதிகப்படியான இறைச்சியை சாப்பிடக்கூடாது. எனவே மாதத்திற்கு ஒரு முறை இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது, உடலில் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும்.

மத்தி மீன்கள்

மத்தி மீன்கள்

மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் அதில் பாதரசம் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் அளவாக சாப்பிட வேண்டும்.

கானாங்கெழுத்தி மீன்

கானாங்கெழுத்தி மீன்

கானாங்கெழுத்தி மீன், உடலுக்கு மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிகள் அந்த மீனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது, வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும்.

நட்ஸ்

நட்ஸ்

கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸ் நேரத்தில் நட்ஸ்களை சாப்பிடுவது, உடலில் வைட்டமின் ஈ சத்தை அதிகரித்து, குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

சாதாரண எண்ணெயைக் கொண்டு சமைத்திருந்தால், இனிமேல் ஆலிவ் ஆயிலுக்கு மாறுங்கள். ஏனெனில் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து வளமான அளவில் உள்ளது.

வெஜிடேபிள் ஆயில்

வெஜிடேபிள் ஆயில்

வெஜிடேபிள் ஆயிலும் கர்ப்பிணிகளுக்கு மிகச்சிறந்த எண்ணெயாகும். இருப்பினும் இதனை அளவாக உட்கொள்வது சிறந்தது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

கீரைகள் எப்போதுமே உடலுக்கு நல்லது. அதிலும் பசலைக்கீரை என்றால் சொல்லவா வேண்டும். இருப்பினும் இந்த கீரையை மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது. இதனால் நல்ல அளவில் வைட்டமின் கே சத்து கிடைக்கும்.

உலர்ந்த பருப்பு வகைகள்

உலர்ந்த பருப்பு வகைகள்

கர்ப்பிணிகள் உணவில் உலர்ந்த பருப்புக்களையும் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால், வைட்டமின் கே சத்து கிடைக்கும். முக்கியமாக இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

கர்ப்பமாக இருக்கும் போது காலையில் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே சத்து கிடைக்கும்.

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள்

உலர்ந்த அத்திப்பழம், திராட்சை, ப்ளம்ஸ் போன்றவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வைட்டமின் கே சத்து கிடைத்து, தாய், சேய் இருவரும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin Foods To Be Consumed During Pregnancy

During pregnancy, there are a number of Vitamins one must consume for the baby's health as well as for the mother. Lets take a look at some of the Vitamin foods which should be consumed during pregnancy.
Story first published: Friday, August 30, 2013, 18:16 [IST]
Desktop Bottom Promotion