For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவுற்றிக்கும் காலத்தில் ஏற்படும் சோர்வைப் போக்க உதவும் 7 உணவுகள்!!!

By Super
|

ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் தாய்மையடைந்த பின்பு, எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டு, குழந்தையின் வளர்ச்சியை பாதுகாப்பது என்ற யோசனை இருக்கும். மேலும் கருவுற்றிருக்கும் காலத்தில், இவ்வாறு யோசிப்பது மிகவும் முக்கியமான ஒன்றும் கூட. ஏனெனில் தாயின் உணவைப் பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. மேலும், இப்பொழுது உள்ள அதிநவீன கருவிகள் மூலம் அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்கூட பார்க்கலாம். இந்த ஒன்பது மாத காலமும் ஒரு தாய் தன் குழந்தையை கருவில் சுமப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு பெண்ணும் தான் கருவுற்றிக்கும் காலத்தை பெரிதும் விரும்புவார்கள். குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும், தாய்க்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.

இத்தகைய இன்பத்தில் ஒரு துன்பமும் உள்ளது. அது தான் சோர்வு. அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் சோர்வு என்பது மிகவும் இயல்பான ஒன்றாகும். சிலர் கருவுற்றிக்கும் காலம் முழுவதுமே சோர்வாக உணர்வார்கள். எனினும் சிலர் அந்த சோர்வு நாளடைவில் குறைவதை உணர்வார்கள்.

நிறைய பெண்கள் கருவுற்றிக்கும் காலத்தின் தொடக்கத்திலேயே, அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் முன்பே, சோர்வுடன் இருப்பதை உணர்வார்கள். சிலர் இரவில் தனது விருப்பமான நிகழ்ச்சியை பார்ப்பதற்கு கூட முடியாமல் சீக்கிரம் உறங்கி விடுவார்கள்.

ஒரு தாய் தான் கருவுற்றிக்கும் காலத்தில் தனது வலிமைகள் அனைத்தையும் இழந்து, காலையில் எழுவது கடினமாக இருந்தாலும் கூட, அதனை பொறுத்து, மதியம் முழுவதும் அந்த வலிமையுடன் சமாளிக்கின்றனர். இத்தகைய சோர்வை சமாளித்து வலிமையுடன் இருப்பதற்கு, கர்ப்பிணிகள் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாய் உடலில் உள்ள இரும்புச்சத்தை செயல்படுத்த உதவுவதுடன் மட்டுமல்லாது, இயற்கையான வலிமையூட்டியாக செயல்பட்டு வரும். மேலும் உடல் சூட்டையும், ஆக்சிஜன் உட்கொள்வதை அதிகரிக்கவும் உதவும். அதிலும் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி சத்தானது, குடைமிளகாயில் 300% நிறைந்துள்ளது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பார்க்க சிறிதாக இருந்தாலும், அவை நமது ஊக்கத்தின் அளவுகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஏனெனில் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரை அதிகம் நிறைந்துள்ளது. சில வகை பழங்களைப் போல, இது உடலில் உள்ள சர்க்கரை அளவுகளை அதிகரிப்பது இல்லை. அதனால் நம்மை இது அதிக நேரம் சக்தியுடன் இருக்கச் செய்யும்.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்களால் ஆனவை. அதிலும் ஒரு சில துண்டுகள் சாப்பிட்டால், அது நமது உடல் வலிமையை ஊக்குவிக்கும். டார்க் சாக்லெட்டில் உள்ள பாலிஃபீனால் சந்தோஷத்தை ஊக்குவிக்கும் இரசாயனமான செரோடோனின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் செரோடோனின் சோர்வு தரும் உணர்வுகளை குறைக்க செய்யும்.

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழங்கள் வலிமையை மெதுவாக வெளிக்கொண்டு வருவதற்கு மூலதனமாக இருக்கும். எப்படியெனில் அதில் மற்ற பழங்களை விட ஊட்டச்சத்து நிறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. ஒரு முழு வெண்ணெய் பழத்தில் உள்ள 14 கிராம் நார்ச்சத்து, நாம் சாப்பிடும் ஷ்ரெட்டட் பிரட் மற்றும் தவிடு உணவு தானியங்களுக்கு போட்டியாக இருந்து, நமது ஜீரணசக்திக்கு உதவும்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களில் உள்ள தனித்தன்மையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மதியம் ஏற்படும் சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலுக்கு சக்தி அளிக்க உதவும். பொட்டாசியத்தை மூலதனமாக கொண்டுள்ள இவை தளர்ச்சி, தசைப்பிடிப்பு மற்றும் நீர் நீக்குதல் போன்றவற்றை எதிர்த்து செயல்படும்.

எலுமிச்சை

எலுமிச்சை

வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சைகள் ஒரு சிறந்த வலிமையூக்கிகள். ஆகவே சோர்வைப் போக்க எளிதான வழி சுடுநீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ எலுமிச்சையை பிழிந்து குடிப்பதாகும். இதனால் அது நீர் சேர்தல் மற்றும் ஆக்ஸிஜனேட் செய்து, உடலை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் இருக்கச் செய்யும். தோல் நீக்கிய முழு எலுமிச்சையை அரைத்து ஜூஸ் போன்று பருகினால் கூட, அழ ஒரு ஜின்கி பூஸ்ட் தான்.

வால்நட்

வால்நட்

வால்நட் அதிக அளவிலான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளன. இவை குறைந்தால், அது நம்மை சோர்வடையச் செய்யும். ஆகவே நாள் முழுவதும் உட்கொள்ளும் உணவில் சிறிதளவு வால்நட் சேர்த்து வர வேண்டும். குறிப்பாக காலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Pregnancy Energy Superfoods That Fight Fatigue

There’s nothing like being pregnant for zapping all your energy and whether it’s that bit harder to get out of bed in the morning or a struggle to stay energised in the afternoon, the solution could be as simple as introducing some different foods into your daily diet.
Desktop Bottom Promotion