For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான அதிமுக்கிய வைட்டமின்கள்!!!

By Ashok CR
|

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக விளங்கிட நீங்கள் உண்ணும் உணவு முக்கியமான பங்கை வகிக்கிறது. குழந்தை பெற்று அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலேயும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் சரியான உணவு வகைகளை உண்ண வேண்டும். இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழந்தைக்கு செல்வதோடு மட்டுமல்லாமல் உங்களையும் அது ஆரோக்கியமாக வைத்திருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் போதுமான வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஆரோக்கியமான உணவுகளுடன் பன்முக வைட்டமின்கள் கலந்த உணவுகளையும் சேர்த்து உண்ணுமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பிரசவத்திற்கு முன் நீங்கள் எடுத்துக் கொண்ட அதே வைட்டமின் உணவுகளை உட்கொள்ள போகிறீர்களா? அப்படியானால் பால் சுரப்பதற்கு தேவையான அளவு போஷாக்கு அதில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பால் சுரப்பதற்கு வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி/யின் சேர்க்கை மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகளவிலானா ஆற்றலும் ஊட்டச்சத்துக்களும் உங்களிடம் இருந்து போகும். அதனை மீண்டும் பெற வேண்டுமானால் இவ்வகை வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும். பன்முகம் கொண்ட வைட்டமின்களை உட்கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கியமான கர்ப்ப கால டிப்ஸ். இந்த டிப்ஸை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் கூட நீங்கள் பின்பற்றலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பால் சுரப்பதற்கு பயன்படுத்தப்படும் பன்முக வைட்டமின்களில் பல முக்கியமான வைட்டமின்களும் அடங்கும். நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருட்களிலும் ஒவ்வொரு வைட்டமின்னின் அளவு மாறுபடும். அதனால் அது உங்களுக்கு போதுமானதாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவரை அணுகுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான சில முக்கியமான வைட்டமின்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி

வைட்டமின் டி

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான வைட்டமின்களில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது வைட்டமின் டி. வைட்டமின் டி, 10 மைக்ரோகிராம் அடங்கியுள்ள உணவுகளை தினமும் உண்ணுங்கள். வைட்டமின் டி சுரப்பதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளியில் நின்றிடுங்கள். இதுவும் கூட ஒரு முக்கியமான கர்ப்ப கால டிப்ஸாகும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் ஒன்றி தான் வைட்டமின் சி. சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், வெப்பப் பிரதேச (ட்ராப்பிகல்) பழங்கள், தக்காளி, குடை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த வைட்டமின்னை நீங்கள் பெறலாம். இவைகள் போக பன்முக வைட்டமின்கள் அடங்கிய அனைத்து உணவுகளிலும் வைட்டமின் சி இருக்கும்.

ஃபோலேட்

ஃபோலேட்

ஃபோலேட் என்பது கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் முக்கியமானதாகும். ஃபோலேட் வேண்டுமானால் அது சேர்க்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்ளலாம். அதே சமயம் பச்சை காய்கறிகளான கீரைகள், பச்சை பூக்கோசுகள், முட்டை கோசு மற்றும் முளைத்த பயறுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடலில் இருக்க வேண்டிய முக்கியமான வைட்டமின்களில் வைட்டமின் ஈ-யும் ஒன்று. வைட்டமின் ஈ கொண்ட பொருட்கள் உட்கொள்ளும் வகையில் இருக்கும் அல்லது உடலில் பூசிக்கொள்ளும் வகையில் இருக்கும். சில சமயம் ஊசி மூலமாக நேரடியாக உடலில் செலுத்தும் படியாகவும் இருக்கும். உங்கள் தேவைக்கேற்ப நீங்களே அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வைட்டமின் ஏ-யின் தேவைப்படும் மிகவும் அவசியம். அதற்கு காரணம் பால் சுரப்பதற்கு அது முக்கியமாக தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ அடங்கியுள்ள பொருட்களை தவிர பூக்கோசு, காரட் மற்றும் பூசணிக்காய் போன்ற கரும்பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளையும் உண்ணலாம்.

வைட்டமின் பி6

வைட்டமின் பி6

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு வைட்டமின் பி6-ன் பரிந்துரைக்கப்படும் உட்கொள்ளும் உணவின் (RDA) அளவு ஒரு நாளைக்கு 2 mg-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கர்ப்ப காலத்தில் பல வைட்டமின்களும் அடங்கிய உணவை உட்கொள்ளும் டிப்ஸை பின்பற்றினால் அதனை தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை தொடருங்கள்.

வைட்டமின் பி2

வைட்டமின் பி2

ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி2 அடங்கியுள்ள உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக அளவிலான நல்ல தரமுள்ள தாய்ப்பால் சுரக்க உதவும். பால், இறைச்சி, முட்டை, நட்ஸ், செறிவூட்டிய மாவு மற்றும் பச்சை காய்கறிகளில் இந்த வைட்டமின் அடங்கியுள்ளது.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

தாய்ப்பாலில் உள்ள வைட்டமின் பி12-ன் அளவு அதை எடுத்துக் கொள்ளும் அளவை பொறுத்து தான் அமையும். சைவ உணவை உட்கொள்ளும் தாய்மார்கள் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் உடையவர்கள் கண்டிப்பாக இந்த வைட்டமின் அடங்கிய உணவினை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி1

வைட்டமின் பி1

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மற்ற வைட்டமின்களை விட வைட்டமின் பி12-ன் தேவை அதிகமாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் போதுமான அளவில் வைட்டமின்களை உட்கொண்டால் தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Essential Vitamins For Women During Breastfeeding

Multivitamin preparations that are specific for lactation will cover the majority of vitamins. Since the amount of vitamin may vary, check the labels and talk to your doctor to ensure that you are getting an adequate supply. Here are some important vitamins for women to take during breastfeeding.
Story first published: Monday, December 23, 2013, 13:40 [IST]
Desktop Bottom Promotion