Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
மொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…
கொரோனா ஊடரங்கால் எந்நேரமும் போன் மற்றும் டிவியைப் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஒருசில உணவுகளை அவர்களுக்கு அன்றாடம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் ஓடி திரிந்து விளையாடிய காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது. வீட்டிற்குள்ளேயே, அதுவும் டிவி, மொபைல் மற்றும் கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்து பொழுதை கழிக்கும் காலமாக மாறிவிட்டது இன்றைய தலைமுறையினருக்கு. சாதாரண நாட்களிலேயே வெளியே சென்று விளையாடாதவர்களுக்கு, இந்த கொரோனா ஊரடங்கு பெரும் மகிழ்ச்சியை அள்ளி வழங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு எல்லாம் இது கூடுதல் மன கவலை என்று தான் கூற வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியத்தை இந்த நவீன உலகம் பாதித்து விடக்கூடாது என்ற அச்சம் ஒரு புறம், அவர்களை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களே மொபைல் போனை கைகளில் தூக்கி கொடுப்பது மறுபுறம். என்ன தான் செய்வது?

இவை அனைத்திற்கும் மேலாக, பள்ளி பாடங்களும் கூட தற்போது ஆன்லைன் வகுப்புகளில் எடுக்கப்படுகின்றன எனும் போது குழந்தைகளைப் பற்றி கவலை அனைத்து பெற்றோருக்குமே அதிகரித்து தான் இருக்கும். இந்த சர்வதேச நோய் தொற்று பரவல் காலத்தில் கண் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் உங்கள் குழந்தையின் உணவு முறையில் சிறிது கவனம் செலுத்தினாலே போதும், அவர்களது கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெரிய விஷயம். அதிலும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வைப்பது என்றால் மிக மிக கடினமான ஒன்று. அதனால் தான், உங்களுக்கு உதவும் வகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சில ஆரோக்கிய உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை மட்டும் முறையாக கொடுத்து வாருங்கள், உங்கள் குழந்தைகளின் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்...

சீஸ் மற்றும் முட்டை
குழந்தைகள் பொதுவாகவே முட்டை மற்றும் சீஸை விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டிலுமே வைட்டமின் ஏ உள்ளதால், கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவிடக்கூடும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லுடீன், கண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. எனவே, உங்கள் குழந்தைக்கு விருப்பமான முறையில் ஆம்லெட்டாகவோ, பொரித்தோ எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனோடு சிறிது சீஸ் சேர்த்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மீன் மற்றும் சிப்ஸ்
சால்மன் மற்றும் மத்தி போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. ஒருவேளை உங்கள் குழந்தை மீனை விரும்பி சாப்பிட்டால், அதனை வித்தியாசமான முறையில் அவர்களுக்கு பிடித்தாற்போல் செய்து கொடுங்கள். கூடவே, சிறிது சிப்ஸ் கொடுங்கள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

பாதாம் சாக்லேட்
உலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தையே இருக்க முடியாது. எனவே, உங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டுமென விரும்பினால், சாக்லேட் உடன் சேர்த்து கொடுங்கள். வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவர். பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதனை உணவு இடைவெளிக்கு நடுவே சாப்பிட கொடுக்க சிறந்தது. காலை உணவுடனோ அல்லது எப்போது வேண்டுமானாலும் கூட அதனை சாப்பிட கொடுக்கலாம்.

காய்கறிகள்
பெரும்பாலான குழந்தைகள் உணவுகளில் ஒதுக்கி வைப்பது காய்கறிகளை தான். அந்த காய்கறிகளில் தான் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை உள்ளன. இத்தகைய ஊட்டச்சத்துக்கள் கண்ணிற்கு நன்மை செய்வதோடு, ஒட்டுமொத்த உடலுக்குமே நன்மை பயக்கும். எனவே, குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிட செய்வது பெற்றோரிகளின் பொறுப்பே. வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா, சட்னி வகைகள் என குழந்தைகள் விரும்பும் உணவுகளில் காய்கறிகளை சேர்த்து வித்தியாசமாக செய்து கொடுங்கள்.

பழங்கள்
பெரும்பாலான குழந்தைகளுக்கு கோடைகால பழங்களான, மாம்பழம் மற்றும் முலாம்பழம் மிகவும் பிடிக்கும். இந்த பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. எனவே, அடுத்த முறை உங்கள் குழந்தை சாப்பிட ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்டால், யோசிக்காமல் பழங்கள் நிறைந்த பவுளை நீட்டுங்கள். பழங்கள் சாப்பிடுவது கண் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குமே நல்லது.



Click it and Unblock the Notifications











