For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாதவை!!!

By Maha
|

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அவர்களை கையாள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் கோபமாக இருக்கும் போது குழந்தைகள் அதிகமாக பிடிவாதம் பிடிப்பதுடன், அந்த கோபத்தை மிகவும் கடுமையாக வெளிக்காட்டுவார்கள். இதனால் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வார்கள்.

ஆனால் அப்படி இருந்தால், குழந்தைகள் அதிகமாக மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியுமா? ஆம், குழந்தைகளுக்கு தங்களின் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாது. அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆகவே இப்போது குழந்தைகள் கோபமாக இருக்கும் போது, அவர்களிடம் பெற்றோர்கள் எப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக அளவில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்

அதிக அளவில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது அதிக அளவில் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்நேரத்தில் அவர்களை சமாதானம் செய்வது என்பது மிகவும் கடினம். இதனால் பெற்றோர்களுக்கும் சில நேரங்களல் கோபம் வரும். இருப்பினும் அந்நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.

 அடிப்பதை தவிர்க்கவும்

அடிப்பதை தவிர்க்கவும்

சில பெற்றோர்கள் குழந்தைகள் சொல்வதை கேட்கவில்லை என்று ஒரு கட்டத்தில் அவர்களை அடிக்க ஆரம்பிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உள்ள கோபம் தணிவதற்கு பதிலாக, அவர்களுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வர ஆரம்பிக்கும். எனவே எந்த ஒரு பெற்றோரும் தன் குழந்தையிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.

கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது

கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது

சில பெற்றோர்கள் என்ன சொன்னாலும் குழந்தை கேட்பதில்லை என்று அவர்களை கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தவே கூடாது. இதனால் அவர்களின் மனதில் இந்த கெட்ட வார்த்தைகள் பதிந்து, மற்றவர்களிடம் சண்டை போடும் போதோ அல்லது கோபப்படும் போது அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்த நேரிடும்.

காரணம் தெரியாமல் முடிவு வேண்டாம்

காரணம் தெரியாமல் முடிவு வேண்டாம்

சில பெற்றோர்கள் குழந்தைகள் எதற்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதற்கான உண்மையாக காரணம் தெரியாமலேயே முடிவு எடுத்துவிடுவார்கள். ஆனால் அப்படி முடிவு எடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் மனதில் உள்ள கோபத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

குழந்தைகளை அச்சுறுத்துவது

குழந்தைகளை அச்சுறுத்துவது

எந்த ஒரு காரணம் கொண்டும் குழந்தைகளை அச்சுறுத்தக்கூடாது. அப்படி அவர்களை அச்சுறுத்துவது முட்டாள்தனமான ஒன்று. இதனால் அவர்கள் மனதில் பயம் தான் அதிகம் இருக்கும். இப்படி பயம் அதிகம் வந்துவிட்டால், பின் அவர்களின் பயத்தைப் போக்குவது மிகவும் கடினமாகிவிடும். ஆகவே உங்கள் குழந்தை கோபமாக இருந்தால், அவர்களிடம் கூலாக பேசி, உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டு, பின் உரிய ஆலோசனையை வழங்குங்கள். இதனால் அவர்கள் பிற்காலத்தில் உங்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Shouldn't Do When Your Child Is Angry

Here are 5 things parents must refrain from doing when their child is angry. Read on...
Story first published: Tuesday, September 23, 2014, 15:09 [IST]
Desktop Bottom Promotion