For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்கள் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்புகள்

வெயில் அடிக்கும் போது எப்போது மழை வரும் என்றும் மழை பெய்யும் போது எப்போ மழை நிற்கும் என்று தான் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் மழைக்காலமோ அல்லது வெயில் காலமோ இரண்டுக்கும் உங்கள் உடல் மற்றும் சருமத்தை தய

|

மழைக்காலம் வந்துவிட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து பார்த்து வெறுத்து போன அனைவரும் மழைக்காக ஏங்கத்தான் செய்கிறார்கள். வெயில் அடிக்கும் போது எப்போது மழை வரும் என்றும் மழை பெய்யும் போது எப்போது மழை நிற்கும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மழைக்காலமோ அல்லது வெயில் காலமோ இரண்டுக்கும் உங்கள் உடல் மற்றும் சருமத்தை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

Pregnancy Care Tips To Stay Fit During Monsoon

இதில் முக்கியமானது கர்ப்பிணி பெண்களின் உடல் நலம். ஏனெனில் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலை கவனிப்பதில் சற்று அதிகமாகவே அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சில சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றுவதால் நீங்கள் மழைக்கால நோய்களில் இருந்து தப்பலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுக் கட்டுப்பாடு

உணவுக் கட்டுப்பாடு

கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உண்ண வேண்டியது அவசியம். ஆனால் மழைக்காலத்தில் அதிகமான உணவு சாப்பிடுதல் சற்று கடினமான காரியம்தான். மழைக்காலத்தில் நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவாகத்தான் இருக்கும். இதனால் பல நோய்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகமான அளவில் உள்ளன. இதனால் நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவு புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். சூடான சூப் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். முட்டைகோஸ் மற்றும் பச்சை காய்கறிகளை மழைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இவற்றில் கிருமிகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

தண்ணீர் அருந்துதல்

தண்ணீர் அருந்துதல்

மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பநிலை குறைகிறது. இதுவே பருவநிலை மாற்றம் என்கிறோம். அதே போல உங்கள் உடலில் வெப்ப நிலையைத் தவிர்க்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் தண்ணீரின் தாகம் குறைவாக இருப்பதால் தண்ணீர் அருந்துவதை மறந்து விடுகிறீர்கள். இது குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே பழச்சாறு மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துவது நல்லது.

MOST READ:மழையில் நனைந்து விட்டீர்களா?அப்போ உங்கள் முடியை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா?

சாலையோர உணவுகள்

சாலையோர உணவுகள்

கர்ப்ப காலத்திற்கு முன் நீங்கள் சாலையோர உணவுகளை ரசித்து சாப்பிட்டு இருந்தால் சரி. ஆனால் கர்ப்ப காலத்தின் போது சாலையோர உணவுகளை நீங்கள் உண்ணக் கூடாது. சாலையோர உணவுகளை உண்பதால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற செயல்பாடுகள் மற்றும் அந்த உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நீர் ஆதாரங்கள், கலப்பட எண்ணெய், ரசாயனங்கள் மற்றும் மசாலா ஆகியவை உங்களுக்கும், குழந்தைக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் தயார் செய்து சாப்பிடுங்கள்.

சுகாதார மேன்பாடு

சுகாதார மேன்பாடு

மழைக்காலத்தின் போது எப்போதும் தனிப்பட்ட எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உங்கள் சுற்றுப்புறங்களில் தூய்மையை எப்போதும் கடைபிடியுங்கள். ஏனெனில் மழைக்காலம் எப்போதும் புது விதமான தொற்றுநோய்களை கொண்டு வரும். சமைப்பதற்கு முன்பு கைகளை கழுவுவது அவசியம். கைகளை கழுவாத பட்சத்தில் இது கிருமிகளை கொண்டு வர வாய்ப்புள்ளது. எல்லா நேரங்களிலும் கிருமிநாசினியை உங்களுடன் வைத்து இருங்கள். நீங்கள் நோய்த்தொற்றுகளினால் பாதிக்கப்படும் போது குழந்தையும் சேர்த்து பாதிக்ககிறது. இதனால் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

வீடு சுத்தம்

வீடு சுத்தம்

உங்களை சுற்றி உள்ள பகுதியை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் வீட்டை சுத்தம் செய்வதற்கு இனிமையான மற்றும் மணம் கொண்ட சோப்பு கரைசலைப் பயன்படுத்துவது மட்டும் போதாது. மூலிகைகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் மற்றும் மற்றவர்கள் கிருமிகளை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் படுக்கைகள் மற்றும் தலையணைகளை அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்துங்கள்.

MOST READ:மழைக்காலத்தில் உங்கள் முகங்களை எவ்வாறு பாதுகாப்பது?

கொசு பாதுகாப்பு

கொசு பாதுகாப்பு

மழைக்காலத்தில் கொசுக்களின் வரவேற்பு அதிகமான அளவில் இருக்கும். விருந்தாளிகள் வருகிறார்களோ இல்லையோ கொசுக்கள் அதிகமாக வரும். கொசுக்களிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். கொசுவிரட்டிகளை பயன்படுத்துங்கள்.பெரும்பாலும் உங்களை சுற்றி இருக்கும் பானைகளிலும், பயன்படுத்தப்படாத பாத்திரங்களிலும் கொசுக்கள் தங்குகிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் கொசு வலைக்குள் பாதுகாப்பாக தூங்குங்கள்.

காலணிகள்

காலணிகள்

மழைக்காலங்களில் சாலையோரங்களில் நடக்கும் போதும் அல்லது தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் நடக்கும் போதும் பாதுகாப்பாக நடப்பது அவசியம். மழைக்காலங்களில் வீடுகளில் நடக்கும் போதும் கால்கள் வலுக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே சரியான காலணிகளை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள்.

ஆடைகள்

ஆடைகள்

மழைக்காலத்தில் உங்கள் ஆடைகளின் மீதும் கவனம் தேவை. மழைக்காலத்தில் உடல் ஈரமாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் நீங்கள் உடலை உலர வைக்கும் ஆடைகளை தேர்வு செய்யுங்கள். அதாவது பருத்தி ஆடைகள் அணிவது சிறந்தது.

MOST READ:கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடலாமா ?

குளியல்

குளியல்

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மழைக்காலத்தில் நீங்கள் குளிக்க வேண்டியது அவசியம். இது கிருமிகள் வழியாக தொற்றுநோய்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது. மேலும் குளிக்கும் நீரில் சற்று வேப்ப இலைகள் அல்லது டெட்டோல் பயன்படுத்துவது உங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் வருவதற்கு முன்பு காப்பதே சிறந்தது. எனவே எல்லாவற்றையும் எச்சரிக்கையாக இருந்து மழைக்கால நோய்களில் இருந்து விடுபட்டு இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Care Tips To Stay Fit During Monsoon

The temptation of monsoons is what causes any person to enjoy the first rains in all their glory. As a pregnant woman, the possibilities of lying on your armchair, sipping on some hot soup, while reading your favorite book and listening to the rain rage outside can be quite the dream. Along with the rains, monsoons bring with themselves a ton of other aspects that make care for moms-to-be an essential thing to remember.
Desktop Bottom Promotion