For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பு விறைப்பு குறையறதுக்கு உண்மையான காரணம் என்ன? எதெல்லாம் கட்டுக்கதை?

|

மூலம், பவுத்திரம், விரைவாக விந்து வெளியேற்றம், விறைப்புத் தன்மைக்கு உடனடி நிவாரணம் என்ற விளம்பரங்கள், கட்சி போஸ்டர்களின் எண்ணிக்கையைத் தாண்டி சுவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வைத்தியத்துக்கு ஆட்களே கிடைக்கவில்லை என்றால், ஒவ்வொருவராகப் பிடித்து ஈயம் பூச வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடும்போல தெரிகிறது. இந்த தொல்லையை விட்டு வீட்டுக்குப் போனால் இன்னொரு சனியன் விடமாட்டேன் என்று காதைக் கடிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்குறி

ஆண்குறி

டி.வியை ஆன் செய்தால் போதும், ஆண்குறி பற்றிய சித்த வைத்தியரின் போதனை பெரிய வேதனையாக இருக்கிறது. கழிப்பறைக்குள் செல்லும் பேரன் மணிக்கணக்கில் செலவிடுவதை எண்ணி நொந்து கொள்ளும் வைத்திய சிகாமணி, பார்த்திராத பேத்திகளின் பிள்ளைப்பேறு பற்றி ரொம்பவே கவலைப்படுகிறார்.

விறைப்புத் தன்மை பற்றி இந்த உலகத்துக்கு எத்தனை எத்தனை கவலைகள். எழுச்சியில்லாத ஆண்குறிகளுக்குத்தான் எத்தனை எத்தனை வைத்திய முறைகள். அடேங்கப்பா.

MOST READ: உங்களுக்கு 100% செட் ஆகுற மாதிரி ஆளை எப்படி கண்டுபிடிக்கிறது? இந்த 10 விஷயம் இருந்தா போதும்

விறைப்புத்தன்மை குறைபாடு - பீதி

விறைப்புத்தன்மை குறைபாடு - பீதி

விறைப்புத்தன்மை செயலிழப்பு என்பதற்கு ஆங்கிலத்தில் Erectile Dysfunction(FD) என்று கூறப்படுகிறது. மருத்துவ உலகம் சுருக்கமாக 'ED' என்ற பதத்தில் விளிக்கும். இது பற்றி உலகில் அநாயாசமாக பரவியுள்ள கட்டுக்கதைகள் அதிர்ச்சி ரகம். வயது வந்த ஒவ்வொரு ஆணையும் அடிவயிற்றுக்கு கீழே தொட்டுப் பார்க்க வைக்கும் தவறான தகவல்கள் அவை. இது பற்றி உண்மைகளை அறிந்து கொண்டால் எந்த மனக்குழப்பத்துக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இல்லை.

விறைப்புத்தன்மை - வயது

விறைப்புத்தன்மை - வயது

கட்டுக்கதை: வளர்ந்து வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்பு ஒரு பகுதியாக இருக்கும். அந்த குறைப்பாட்டுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இது போன்ற கட்டுக்கதைகளால் பலர் இடிந்து போயிருக்கலாம்.

உண்மை : வயது முதிர்ந்த காலத்தில் விறைப்புத்தன்மை செயலிழப்பது பொதுவான ஒன்றாகவே இருந்தாலும், இந்த குறையுடன் வாழ விதிக்கப்பட்டதாக கருதக்கூடாது. செய்தித்தாள்களில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற முதியவர் கைது என்ற செய்தி நம்மைக் கடந்து தான் சென்று கொண்டிருக்கிறது. வாலிப்பான காலக்கட்டத்தில் இருந்த விறைப்புத்தன்மையை, முதுமையடைந்த காலத்தில் பெறுவதற்கு தூண்டுதல் அதிகம் தேவைப்படுவது என்பது அசாதாரணமானது அல்ல. திருப்தியான உடலுறவை எட்ட முடியவில்லை என்பதற்கு எந்த காரணமும் இல்லை. வயோதிக வயதிலும் கிளர்ச்சியை அதிகம் பெற முடியும் என்பது கூட நடைமுறையில் உண்மைதான்.

வயது

வயது

கட்டுக்கதை: விறைப்புத்தன்மை குறைபாடு வாலிப வயதினருக்கு வருவதில்லை என்ற கற்பிதம் தவறானது.

உண்மை: விறைப்புத்தன்மையில் எழுச்சியின்மை 75 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பனும், இந்த குறைபாட்டுக்கு வயது வித்தியாசம் எதுவும் கிடையாது.

MOST READ: இந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம்? அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க

விறைப்புத்தன்மை குறைபாடு - உடல்நலம்

விறைப்புத்தன்மை குறைபாடு - உடல்நலம்

கட்டுக்கதை : விறைப்புத்தன்மை குறைப்பாட்டால் மனக்கலக்கம் ஏற்படுமே தவிர, இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது.

உண்மை: விறைப்புத்தன்மையில் கிளர்ச்சி இல்லை என்பது உயிருக்கு அச்சுறுத்தல் கிடையாது. அதேநேரத்தில் சர்க்கரை நோய், இதயக் கோளாறு ஆகிய நோய்களுக்கான அறிகுறியாக இது இருக்கலாம்.விறைப்புத் தன்மையில் அண்மைக்காலமாக எழுச்சியில்லை என்று கருதினால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். பரிசோதனைகள் மட்டுமே இதற்கு தீர்வாகாது என்பதால் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினால், திருப்திகரமான உடலுறவுக்கு மீண்டும் திரும்ப முடியும். ஆகையால் விறைப்புத்தன்மைக்கு காரணமான மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.

ஈர்ப்பான இணை

ஈர்ப்பான இணை

கட்டுக்கதை: உங்களுடைய இணையோ அல்லது உங்களுடைய மனைவியோ கவர்ந்து ஈர்க்கக்கூடியவராக இல்லாவிட்டால், விறைப்புத் தன்மையை பெற முடியாது என்ற பொதுவான கருத்து.

உண்மை: விறைப்புத் தன்மையில் குறைபாடு பங்குதாரர் ஒருவரில் பாலியல் ஈர்ப்பு இல்லாததும் ஒரு காரணம் ஆகும். இல்லை ஏதாவதொரு காரணமாகவும் இருக்கலாம்.

விறைப்புத்தன்மை குறை - காரணங்கள்

விறைப்புத்தன்மை குறை - காரணங்கள்

* இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தமனி தடிப்பு போன்ற காரணங்கள்.

* சர்க்கரை நோய்

* கவலை, மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொண்ட மருந்துகள்

* நரம்பு மண்டலக் கோளாறுகள், உடலில் உள்ள திசுவின் ஒரு பகுதி செயலிழத்தல், பார்க்கின்சன் நோய்

* ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்பட்டுள்ள கோளாறு

* பதற்றம், மன அழுத்தம், மீளமுடியாத கவலைகள்

* புகைப்பிடித்தல், மது அருந்துதல்

* சுரப்பிகள் மற்றும் சிறுநீரகப்பை அறுவை சிகிச்சையால் செயலிழப்பு.

MOST READ: மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்...

மாத்திரை

மாத்திரை

கட்டுக்கதை: விறைப்புக் குறைபாட்டுக்கு ஒரே வழி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

உண்மை: விறைப்புத்தன்மை எழுச்சியின்மைக்கு தீர்வு காண பல்வேறு வழிகள் உள்ளன. உணவு மற்றும் மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு வேறுசில சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாய்வழியாகச் செலுத்தவும், ஆண்குறி மற்றும் சிறுநீரகப் பையில் ஊசி மூலம் மருந்துகளை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம்.

மருத்துவ ஆலோசனை முக்கியம்

மருத்துவ ஆலோசனை முக்கியம்

உடல் நலக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம், விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பின் நிபந்தனைகளின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் வேறொரு சிகிச்சைக்கு மாற்றக்கூடும். மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்தும் முன்பு மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

புகைப்பிடிக்க வேண்டாம்

புகைப்பிடிக்க வேண்டாம்

விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளும், சிகிச்சைகளும் உள்ளது. உதாரணத்துக்கு புகைப்பிடித்தல், மருந்து அருந்துதலை கைவிடலாம். மேலும் உங்களின் பருமனை குறைத்துக் கொள்ளலாம்.

MOST READ: இன்னைக்கு உங்க ராசிக்கு எந்த திசையில இருந்து அதிர்ஷ்டம் வரப் போகுதுனு தெரிஞ்சிக்கணுமா?

வல்லுநர்கள் உதவி

வல்லுநர்கள் உதவி

பதற்றத்துக்கு பிசியோதெரபி வல்லுநர்களிடம் சிகிச்சை பெற்றவர்கள் விறைப்புத் தன்மையை மீளப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த குறைபாடைக் கொண்டவர்கள், கைதேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இதனால் அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவர்களின் நவீன உபகரங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் உங்களுக்கு உதவக் கூடும். இது உங்கள் ஆண் குறியின் கிளர்ச்சியை மீட்டுக் கொடுப்பதாக இருக்கும்.

கட்டுக்கதை: விறைப்புத் தன்மை குறைபாட்டை மருத்துவரின் ஆலோசனையோ, சிகிச்சையோ இல்லாமல் மூலிகை மருத்துவம் மூலம் குணமாக்க முடியும்

உண்மை: விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு அலோபதி அல்லாத மாற்று மருந்துகளை கையாண்டால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நீங்கள் தேர்வு செய்யும் மருந்துகளில் சரியான உள்ளடக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்படலாம். அதில் ஆபத்தான பல்வேறு பொருட்கள் கலந்திருக்கலாம். மருத்துவனை ஆலோசிக்காமல் மாற்று சிகிச்சை முறையில் இறங்குபவர்கள், விறைப்புத்தன்மை குறைபாட்டை கடைசி வரை மீட்டுக்கொள்ளவே முடியாமல் போகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About Erectile Dysfunction

There's a lot of misinformation about the causes and treatments of erectile dysfunction (ED). To know the facts, you may need to bust some myths along the way.
Story first published: Monday, March 11, 2019, 15:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more