Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
வயிற்றில் கரு உண்டாகும்போது பிறப்புறுப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்?... வேறு அறிகுறிகள் என்ன?
பெண்கள் கருவுறுதலின் போது அவர்களுடைய உடலுக்குள் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
நமது இயற்கை அன்னையின் அம்சங்கள் எப்போதும் சிறப்பானது. அவள் படைப்பில் உண்டான ஒவ்வொருவரும் அற்புதமானவர் தான் என்பது மறுப்பதற்கில்லை.

அந்த இயற்கை அன்னையின் படைப்பில் உண்டான ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் ஒவ்வொரு மாதமும் ஒரு மாற்றம் உண்டாகும். அது மிகவும் இயற்கையானது மற்றும் அற்புதமானது.

உடலியல் மாற்றங்கள்
ஆம். இந்த உடலியல் மாற்றம் சில வலிகளையும் பாதிப்புகளையும் தந்தாலும், பல சுவாரஸ்யமான மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த உடல் மாற்றங்களை சில பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள், ஆனால் பல பெண்களுக்கு அவர்களின் உடல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு இருப்பதில்லை.

கருத்தரிப்பு முயற்சிகள்
பல பெண்கள் இந்த மாற்றங்களை உணர்ந்து இதற்கு ஏற்றவாறு, அவர்களின் கருத்தரிப்பு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். ஆகவே இந்த பதிவை முழுவதும் படித்து பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மாற்றங்கள்
மாதவிடாய் காலத்திற்கு முன் உங்கள் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் உண்டாவதை கண்டதுண்டா? ஆம் இதற்கான காரணங்கள் குறித்து அறிந்து கொள்வோம் வாருங்கள். கருத்தரிப்பு கருப்பையில் நிகழ்கின்ற கால கட்டத்திலும் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகின்றன என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

மூளையில் தொடங்குகிறது
ஒவுலேஷன் என்னும் அண்டவிடுப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறு சுரப்பி மூளையில் உள்ளது. இது ஹைபோதலாமஸ் என்று அழைக்கப்படுகிறது. கருப்பையுடன் இணையும் ஹார்மோன்களை இது வெளியிடுகிறது. உங்கள் மாதவிடாய்க்கு பிறகு, முதல் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது முட்டையை உருவாக்க அனுமதிக்கும் நுண்ணலைகளை ஊக்குவிக்கிறது. பிறகு மாதவிடாய் சுழற்சியின் மத்திய நாட்களில் அடுத்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது ஒரு நுண்ணிய முட்டை வெளியீட உதவுகிறது அதனால் பல்லுயிர் குழாய்கள் அதை பிடிக்க முடியும்

வெள்ளைப்படுதல்
கரு உருவாகின்ற இந்த காலகட்டத்தில் ஒரு முக்கிய அறிகுறி தான் இந்த வெள்ளைப்படுதல். பிறப்புறுப்பில் வெள்ளையாக திரவம் வெளியேறும். இது கர்ப்பப்பை வாய் சளி என்றும் கூட சொல்லப்படும். இது மிகவும் மெலிதாக, நீண்டு இருக்கும். முட்டையின் வெள்ளைக் கரு போல் இருக்கும் இதுவே கருவுறுதலுக்கான சிறப்பான காலம் என்று பல பெண்கள் நம்புகின்றனர். இதுவே அதற்கான அறிகுறியுமாக உள்ளது. மருத்துவர்களும் இதை ஒரு அறிகுறியாகத் தான் கருதுகிறார்கள்.

உணர்ச்சி மிகுதி
ஆம், இயற்கை அன்னையின் கொடையான குழந்தை செல்வம் உருவாக சரியான நேரம் இது. அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்கள் உணர்ச்சிகள் அதிகரித்துக் காணப்படும். கருத்தரிப்பு நடக்கும் நாட்களில் உடலில் ஏற்படுகின்ற ஹார்மோன் எழுச்சி காரணமாக இந்த உணர்ச்சி மிகுதி ஏற்படுகிறது.

உடல் வெப்பம்
உங்கள் உடலின் வெப்ப நிலை சராசரியை விட அரை செல்சியஸ் அதிகரித்து காணப்படும். அடுத்த மாதவிடாய் காலம் வரை இந்த அதிகரித்த நிலை காணப்படும். இந்த செயல்பாடுகளால் உடலின் வெப்பம் இயல்பைக் காட்டிலும், ஏன் சாதாரண மாதவிடாய் நாட்களை விடவும் அதிகமாக இருக்கும்.

வலி மற்றும் திட்டுக்கள்
இந்த காலகட்டத்தில் சில பெண்கள் ஒரு வித வலியை அனுபவிப்பதாக கூறுகின்றனர். கருமுட்டை வெளியாவதால் உண்டாகும் அடிவயிற்று கோடு காரணமாக இந்த வலி உண்டாகிறது. சில நுண்ணலைகள் பாதிக்கப்படுவதால் சில நேரம் இரத்த திட்டுகள் கூட ஏற்படலாம். முட்டை முதிர்ச்சி அடையும்போது, அது நுன்குமிழில் இருந்து வெடிக்கிறது.



Click it and Unblock the Notifications
