For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 2 விஷயங்கள் என்னன்னு தெரியுமா?

மாதவிலக்கு மற்றும் குழந்தைக்கு பாலூட்டுதல் இவையிரண்டைப் பற்றியும் எல்லா பெண்களும் நன்கு தெரிந்து வைத்திக்க வேண்டியது மிக அவசியம்.

By Brinda Jeeva
|

பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது உடனே மாதவிடாய் சுழற்சி தொடங்குவது மிகவும் அறிது .

தாய்ப்பால் ஓவ்வொரு குழைந்தைக்கும் கண்டிப்பாக கிடையாகவேண்டிய ஊட்டச்சத்து . இவ்வுலகில் பிறந்த குழந்தைக்கு சிலமாணிக்குள்ளாக தாய்ப்பால் கொடுத்தல் அவசியம். தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல்நலத்திற்கும் வழி செய்கிறது. குழந்தை பிறந்த சிலநொடிகளில் சுரக்கும் சீம்பாலை குழந்தை குடிக்கும்பொழுது தாயின் கர்பப்பையினை சுருக்கி ரத்தபெருக்கை கட்டுப்படுத்தவும் வழிசெய்கிறது .இது (Placenta) பிளசண்டா என்கின்ற நஞ்சுக்கொடியை வெலிதல்லவும் உதவும்.

health

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சிலருக்கும், மாதவிடாய் சுழற்சி தாமதமாகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்படுவதற்கு தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள் :

காரணங்கள் :

பிரசவத்திற்குப் பின் தாயின் உடல் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு சில காலம் தேவைப்படும் . கர்ப்பகாலத்தில் 9 மாதங்களுக்கு மாதவிடாய் சுழற்சி இருக்காது. பிரசவத்திற்கு பின் எந்த நரத்தில் வேண்டுமானால் மாதவிடாய் துடங்களாம் .பிரசவத்திற்குப் பின் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்படுவதற்கு ஹார்மோன் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.

சுகாதாரம்

சுகாதாரம்

தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மாதவிடாய் சுழற்சி துடங்குவதற்கு 1 வருடங்கள் கூட ஆகலாம். எந்த குறிப்பிட்ட காலஅளவை எந்த மருத்துவரால் நிர்ணயித்து கூறமுடியாது . அந்த தாய் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலின் அளவையும் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும் உடல் தன்மையை பொறுத்து மாறுபடும்.

ரத்தப்போக்கு

ரத்தப்போக்கு

புதிதாக தாய்மை அடைந்த பெண்ணிற்கு , குழந்தை பிறந்தவுடன் மகப்பேற்று இரத்தப்போக்கு ஏற்படும். இந்த இரத்தப்போக்கு ஒரு வாரத்திற்குள் குறைந்துவிடும். பல பெண்கள் இதை மாதவிடாய் சுழற்சியின் ஆரம்பமாக தவறாக புரிந்துகொள்கிறார்கள். பிரசவத்திற்கு பின் இரத்தப்போக்கு சில நாட்கள் அல்லது பல நாட்கள் இருந்தால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. தாயும் சேயும் சுகாதாரமான சூழலை கடைபிடிப்பது மிகவும் இன்றியமையாதது.

ஹார்மோன்

ஹார்மோன்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்பொழுது Oxitocin என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் கருப்பை சுருங்குவதை எளிதாக்குகிறது.பிரோலேக்ட்டின்( Prolactin ) என்ற ஹார்மோன் தாய்ப்பால் கொடுப்பதன்முலம் அதிகரிக்கிறது . இந்த பிரோலேக்ட்டில் ஹார்மோன் அதிகரிப்பு மாதவிடாய் சுழற்சி தாமதம் ஆகுவதற்கு முக்கிய காரணமாகும் .தாய் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலின் அளவு குழந்தை வளர வளர குறைந்து பிரோலேக்ட்டி ஹார்மோன் சுரப்பது குறைந்து விடும். அதுவே மாதவிடாய் சுழற்சி ஆரம்பம் ஆக்குவதற்கு வழிசெய்யும்.

மாதவிலக்கு

மாதவிலக்கு

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சி தாமதமாகுவதற்கு மண அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் . புதிதாக தாய்மை அடைந்த பெண்ணிற்கு குழந்தையை இரவும் பகலும் பாலூட்டும் பொழுது தூக்கமின்மை ஏற்படும் . இது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் .

பிரசவத்திற்கு பின் எப்போது வேண்டுமானாலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாகும். பொதுவாக பிரசவம் முடிந்து 6-7 வாரத்திற்கு பின் பெண்களுக்கு முதல் மாதவிடாய் சுழற்சி துடங்கும் . தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மாதவிடாய் சுழற்சி துடங்குவதற்கு 1 வருடங்கள் கூட ஆகலாம். இவை அனைத்தும் தாய்ப்பாலின் தன்மை, குழந்தை தாய்ப்பால் அருந்தும் கால இடைவேளை, ஹோர்மோன் சீராக சுரக்கும் தன்மை ஆகியவை பொறுத்து மாறுபடும்.

பாலூட்டுதல்

பாலூட்டுதல்

தாய்ப்பாலூட்டும் தாயில், முட்டை உருவாவதை குறைக்கக் கூடிய இயக்குநீர்கள் உருவாதலால், இயற்கையாக அடுத்த கருவுறுதல் பின்போடப்படலாம். தாய்ப்பாலூட்டும் காலத்தில் முட்டைகள் உருவாதலும், மாதவிடாய் வட்டமும் பின்போடப்படும். முழுமையான பாலூட்டல் செய்யும் தாயில், சரியான குழந்தை பேணும் முறைகள் நடைமுறைப் படுத்தப்படும்போது, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: breast feeding
English summary

menstruation and breastfeeding everything you need to know

menstruation and breastfeeding everything you need to know every women. Both its inter related things.
Desktop Bottom Promotion