இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை கூட இருக்கலாம் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

இரட்டை குழந்தைகள் என்பது அனைவருக்கும் கிடைக்கும் வரமல்ல... பலர் இரட்டை குழந்தைகள் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அதற்காக சில முயற்சிகளையும் செய்வார்கள். ஆனால் வெகு சிலருக்கே இரட்டை குழந்தைகள் என்ற வரம் கிடைக்கிறது...!

இரட்டை குழந்தைகள் பிறப்பதே அரியது என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வாறு தந்தைகள் கூட இருக்க முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விஷயம் உங்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் இது உண்மை தான். ஆனால் அரியது...!

இது போன்ற விஷயங்கள் வரலாற்றில் ஒரு சில முறை மட்டுமே நடந்துள்ளது. நானூறு இரட்டை குழந்தைகளுக்கு 1 ஜோடி இரட்டை குழந்தைகள் தான் இது போன்று இருக்கிறது. இதை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெவ்வேறு உருவமைப்பு

வெவ்வேறு உருவமைப்பு

வியட்நாமை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது மனைவிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சற்றும் ஒத்துப்போகாத மாதிரி இருப்பதை கண்டு அதிர்ந்தார்..! பொதுவாக ஒரே உருவம் இல்லாத இரட்டை குழந்தைகள் கூட பிறக்கும். ஆனால் மரபு ரீதியாக அது முன்னோர்களின் உருவமைப்பை பெற்றிருக்கும். எனவே அவர் சந்தேகப்பட்டு தனது மனைவிக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்துள்ளார்.

Image Source

டி. என். ஏ பரிசோதனை

டி. என். ஏ பரிசோதனை

அந்த பரிசோதனையில் இரண்டு குழந்தைகளுக்குமே X குரோமோசோம் பொருத்தமாக தான் இருந்தது. ஆனால் Y-குரோமோசோம் தான் வேறுபட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ந்த மருத்துவமனை மீண்டும் இந்த பரிசோதனையை செய்தது. ஆனால் ரிசல்ட் ஒரே மாதிரியாக தான் இருந்தது.

தாய் ஒன்று தான்

தாய் ஒன்று தான்

இந்த பரிசோதனையின் முடிவாக இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே தாய் தான்.. ஆனால் ஒரு குழந்தைக்கு மட்டும் தந்தை வேறு என்ற முடிவு கிடைத்தது. இந்த முறை எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கும்.. அறிவியல் ரீதியாக இது எப்படி சாத்தியம் என்பதை பற்றி காணலாம்.

எப்படி இப்படி எல்லாம்?

எப்படி இப்படி எல்லாம்?

பெண்களின் கருமுட்டை கருவுறும் போது அவள் கர்ப்பமாகிறாள். அதே சமயம் இரண்டு கரு முட்டைகள் கருவுறும் போது அவளுக்கு இரட்டையர்கள் பிறக்கிறார்கள். இப்போது ஒரே மாதவிடாய் சுழற்சி காலத்தில் இரண்டு முட்டைகள் வேறு வேறு நபர்களால் கருவுற்றிருந்தால் தான் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.

இவ்வாறு கூட நிகழலாம்!

இவ்வாறு கூட நிகழலாம்!

நாம் இரட்டையர்களை காணும் போது அவர்கள் ஒரே சமயத்தில் கருவுற்று இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இரட்டையர்கள் ஒரே நாளில் வெவ்வேறு தடவைகளில் அல்லது சுழற்சிகாலத்தில் கூட தனித்தனியாக இரட்டை குழந்தைகள் உருவாகலாம். இதில் இரண்டு ஆண்கள் கூட சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அனைவரும் இப்படி இல்லை!

அனைவரும் இப்படி இல்லை!

பார்க்க வெவ்வேறு மாதிரி இருக்கும் இரட்டை குழந்தைகள் அனைவருமே இப்படி தான் என்று அர்த்தமில்லை.. இரட்டைகளில் ஒருவர் தனது அம்மாவின் மரபு ரீதியாகவும், மற்றொருவர் தன் அப்பாவின் மரபு ரீதியாகவும் இருக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

யூனியோவலர்ட் ட்வின்ஸ்

யூனியோவலர்ட் ட்வின்ஸ்

சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசலாக ஒரே மாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கரு முட்டையோடு, ஆணின் உயிரணு சேர்ந்து கருவான உடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

சயாமிஸ் ட்வின்ஸ்

சயாமிஸ் ட்வின்ஸ்

ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும் நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும் போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்' என்கிறார்கள்.

பைனோவளர் ட்வின்ஸ்

பைனோவளர் ட்வின்ஸ்

இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. அதில் ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் பிறக்கும். ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம், பொதுவாக பெண்ணின் சினைப் பையில் ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவைகள் ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும். அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.

பல குழந்தைகள் எப்படி?

பல குழந்தைகள் எப்படி?

இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் பிறக்கின்றனவே, இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது, ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்து விடுகிறது.

8 குழந்தைகள்..!

8 குழந்தைகள்..!

சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் 7-க்கும் மேற்பட்ட முட்டைகளாகக் கூட வெடிக்கச் செய்துவிடுகிறது. இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். இவர் 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Twins Can Have Different Fathers

Twins Can Have Different Fathers
Story first published: Tuesday, December 5, 2017, 13:00 [IST]