உங்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படுத்தும் சிலரின் பிரசவ அனுபவங்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

பிரசவ காலம் என்பது அனைவருக்கும் ஒரு பொன்னான காலம் என்று தான் சொல்ல வேண்டும். 40 வாரங்கள் கருவில் சுமந்த குழந்தையை நேரில் காணப்போவது என்றால் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும்?

ஆனால் சிலருக்கு வித்தியாசமான சில பிரசவ அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். உங்களை அதிர்ச்சியடைய செய்யக்கூடிய சிலரின் பிரசவ அனுபவங்கள் பற்றி இந்த பகுதில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பீல்ட் ட்ரிப்பில் தாயான குழந்தை

1. பீல்ட் ட்ரிப்பில் தாயான குழந்தை

12 வயது குழந்தை தனது பள்ளி பீல்ட் ட்ரீப்பிற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்தனர்.

பின்னர் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு பிரசவ வலி எடுத்துள்ளது என்று, அந்த குழந்தைக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. இருப்பினும் அந்த குழந்தை கர்ப்பமாக இருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அந்த இளம் தாய்க்கு கூட தெரியவில்லை.

2. 23 வயதில் பாட்டி

2. 23 வயதில் பாட்டி

23 வயது என்றால் நமது மனதில் பல பல ஆசைகள் சிறகு விரித்து பறக்கும். ஆனால் பாட்டி ஆகி விடுவோம் என யாரும் நினைக்கமாட்டோம். ஆனால் 23 வயது மதிப்புடைய பெண்ணின், பெண்ணுக்கு தனது 11 ஆவது வயதில் குழந்தை பிறந்துள்ளது.

அதே சமயம் ரோமேனியா நாட்டை சேர்ந்த இந்த 23 வயதுடைய பெண்ணும், தனது 12 வயதிலேயே தாயாகி, தற்போது பாட்டியும் ஆகிவிட்டார்.

3. பிரசவத்திற்கு முன் மாரத்தான்

3. பிரசவத்திற்கு முன் மாரத்தான்

நாம் அனைவரும் பிரசவ காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகளை பற்றி அறிவோம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த, மில்லர் என்ற பெண்மணி தனது கர்ப்பத்தின் 39-ஆவது வாரத்தில், மருத்துவரின் அனுமதியுடன் 45,000 பேருடன் சேர்ந்து மாரத்தானில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

4. கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை

4. கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை

ஜெனிபர் என்ற பெண், விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்காக தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவருக்கு தீடிரென வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்பட்டுள்ளது. அவர் படுக்கையில் அசௌகரியமாக உணர்ந்த காரணத்தினால், மருத்துவரை அழைத்துள்ளனர்.

பின்னர் தான் தெரிந்தது அவருக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்று... ஆனால் அவருக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை. மாதவிடாய் கூட ஒழுங்கான முறையில் தான் ஏற்பட்டுள்ளது.

5. ரோட்டில் குழந்தை பெற்ற தாய்

5. ரோட்டில் குழந்தை பெற்ற தாய்

அனா பெலிஸ் ஹெர்னாண்டஸ் என்ற கர்ப்பிணி பெண் ஒரு கேப்பை புக் செய்து அதில் பயணித்து கொண்டிருந்தார். வழியில் தான் அவர் தனக்கு பிரசவம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்தார். அதை தனது கார் டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.

தனது காரில் இரத்த கரை படிந்து விட கூடாது என்ற காரணத்திற்காக, அந்த கர்ப்பிணி பெண்ணை தனது காரில் இருந்து வெளியே எட்டி உதைத்து தள்ளி விட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு ரோட்டில் தனிமையில் பிரசவம் நடந்தது.

6. 20 நாட்கள் பிரசவ வலி

6. 20 நாட்கள் பிரசவ வலி

ஆமி பக் என்ற பிரிட்டிஷ் டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பமான 19-ஆவது வாரத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நாட்களுக்கு பிறகு தான் குழந்தை பிறந்தது.

7. 75 நாட்கள் பிரசவ வலி

7. 75 நாட்கள் பிரசவ வலி

20 நாட்கள் பிரசவ வலி இருந்தாலே தாங்க முடியாது. ஆனால் போலாந்தை சேர்ந்த பெண்மணிக்கு 75 நாட்கள், அதாவது இரண்டரை மாதங்கள் பிரசவ வலி இருந்தது. அதன் பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்தன.

8. பெங்களூரில் நடந்த சம்பவம்

8. பெங்களூரில் நடந்த சம்பவம்

இதுவரை நடந்தது எல்லாம் வெளிநாடுகளில் தான், ஆனால் நமது பெங்களூரில் கூட இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனது முதல் பிரசவத்திற்கு பிறகு 4 மாதத்தில் கடுமையான வயிற்று வலி வந்துள்ளது.

இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு செல்லவே, உங்களுக்கு இன்னும் அரை மணிநேரத்தில் பிரசவமாகிவிடும் என மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். அதன்படி குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்துவிட்டது.

இந்த பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மாதவிடாய் சுழற்சியும் சரியாக தான் நடந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Pregnancy and Birth Stories

Surprising Pregnancy and Birth Stories
Story first published: Wednesday, July 19, 2017, 11:01 [IST]