மலட்டுத்தன்மை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகளும்! உண்மைகளும்!

Written By:
Subscribe to Boldsky

கருவுறாமைக்கு பல காரணங்கள் நமது ஊர் வழக்கத்தில் சொல்லப்பட்டு வருகின்றன. சிலர் அங்கே படித்தேன், இங்கே படித்தேன் என்று சிலவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். பல வதந்திகளை கேட்டு, தம்பதிகள் சிலர் உரிய சிகிச்சை எடுக்காமல், குழந்தை இல்லாமலேயே வாழ்கின்றனர்.

இந்த பகுதியில் கருவுறாமை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1:

கட்டுக்கதை 1:

ஆண்களுக்கு 80 வயது வரை விந்தணுக்கள் ஆரோக்கியமாக எந்த பிரச்சனையும் இன்றி இருக்கு. கருவுறாமைக்கு காரணம் பெண்கள் மட்டும் தான்!

உண்மை:

உண்மை:

ஆண்களுக்கு 80 வயது அல்லது அதற்கு பின்னரும் கூட விந்தணுக்கள் இருக்கும். ஆனால் இது ஒரு கருவை உருவாக்கும் அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான் பிரச்சனை.

இன்றைய வாழ்க்கைமுறையினால் பல ஆண்களுக்கு கருவுறாமை பிரச்சனை ஏற்படுகிறது. வை-பை, எலட்ரானிக் பொருட்கள், துரித உணவுகள், ஆல்கஹால் போன்றவை விந்தணுக்களின் திறனை குறைத்துவிடும். எனவே ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும்.

கட்டுக்கதை 2:

கட்டுக்கதை 2:

மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் இருந்தால், எந்த வயதிலும் கருவுறலாம்!

உண்மை :

உண்மை :

மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் இருக்க வேண்டியது கருவுறுதலுக்கு அவசியமான ஒன்று தான். ஆனால் மாதவிடாய், கரு முட்டையின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் சார்ந்தது அல்ல.

25 வயதிற்கு மேல் கருமுட்டையின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. எனவே 30 வயதிற்கு மேல் கருவுறுவது சிரமமாகிறது. எனவே 30 வயதிற்குள் கருவுறுதல் சிறப்பு.

கட்டுக்கதை 3:

கட்டுக்கதை 3:

கருவுற நினைக்கும் போது மட்டும் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் போதும்!

உண்மை :

உண்மை :

கருவுற வேண்டும் என்று திட்டமிட்டால் 6 மாதத்திற்கு முன்னரே புகைப்பிடிப்பதை நிறுத்தி விட வேண்டியது அவசியம்.

உங்கள் குழந்தை கருவிலும், புவியிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினால், குழந்தைக்கு முன்னரே புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுங்கள்..! புகைப்பிடிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்!

கட்டுக்கதை 4 :

கட்டுக்கதை 4 :

தினமும் இரவு உடலுறவு வைத்துக்கொண்டால் ஐ.வி.எப் சிகிச்சையின்றி குழந்தை பெறலாம்!

உண்மை :

உண்மை :

கருவுறாமை பிரச்சனையானது, பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை, உடல் பருமன் பிரச்சனை, கருமுட்டைக்கு செல்லும் குழாயில் அடைப்பு போன்றவை இருக்கலாம் அல்லது ஆண்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.

இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இது போன்ற வழிகளை கையாழுவது தவறு.

கட்டுக்கதை 5 :

கட்டுக்கதை 5 :

உடல் பருமனுக்கும் கருவுறாமைக்கும் தொடர்பு இல்லை. உடல் பருமன் கொண்ட பெண்கள் கருவுறுவதில்லையா?

உண்மை :

உண்மை :

உடல் பருமன் மட்டுமே கருவுறாமைக்கு காரணமாக இருக்க முடியாது. ஆனால் உடல் பருமனால் பிசிஓஎஸ், ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். இது கருவுறாமைக்கு காரணமாக அமையும்.

கட்டுக்கதை 6:

கட்டுக்கதை 6:

சாப்பிடும் உணவுக்கும் கருவுறுதலுக்கு தொடர்பு இல்லை!

உண்மை :

உண்மை :

சில மூலிகைகளும், உணவு வகைகளும் கருமுட்டையையும், விந்தணுக்களையும் ஆரோக்கியமாக்கும். சில உணவுகள் கருவுறாமையை ஏற்படுத்தும். எனவே கஃபின் கலந்த கோலா மற்றும் காபியை அளவோடு அருந்தது நல்லது.

கட்டுக்கதை 7:

கட்டுக்கதை 7:

மன அழுத்தத்தினால் கருவுறாமை இருந்தால், யோகா, தியானம் செய்தால் போதும்! சிகிச்சை தேவையில்லை!

உண்மை :

உண்மை :

மன அமைதி என்பது கருவுறாமைக்கு காரணமாக அமையும். அதற்கு யோகா, தியானம் ஆகியவை செய்யலாம். ஆனால் மன அழுத்தத்தினால் இதுவரை என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை பற்றி மருத்துவரின் ஆலோசனை பெருவது மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven myths and facts everyone should know about fertility

Seven myths and facts everyone should know about fertility