மனஅழுத்தம் மற்றும் வேலைப்பழு விறைப்புத்தன்மையை எவ்வாறு பாதிக்கிறது?

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

அமெரிக்காவில் 18 மில்லியனுக்கு மேற்பட்ட 20 வயதினர்களுக்கு விறைப்பு திறன் குறைபாடு இருக்கிறதாம். சிலர் உண்மையான கணக்குப்படி, கிட்டத்தட்ட முப்பது மில்லியன் பேர் விறைப்பு திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

வயது அதிகரிக்க அதிகரிக்க விறைப்பு திறன் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆனால் அனைத்து நேரங்களிலும் வயது சார்ந்து மட்டுமே விறைப்பு திறன் குறைபாடு ஏற்படுவதில்லை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் விறைப்பு திறன் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறியவும், அதனை சரி செய்யவும் முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் மற்றும் மனம்

உடல் மற்றும் மனம்

விறைப்பு திறன் குறைபாடு என்பது மனம் மற்றும் உடல் இரண்டு சார்ந்தும் ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சை முறையானது நீங்கள் உங்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொருத்து அமையும். இது மனம் சார்ந்ததாக இருந்தால், குணப்படுத்துவது சற்று எளிதானதாகும்.

உடல் சார்ந்த பிரச்சனைகள்

உடல் சார்ந்த பிரச்சனைகள்

உங்களுக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருந்தால் விறைப்பு தன்மை பாதிக்கப்படலாம். இதய பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவு, உடல் எடை அதிகரிப்பு, அதிக அளவில் மது அருந்துவது ஆகியவை இருந்தால் விறைப்பு தன்மை குறையும்.

எப்படி மனம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது?

எப்படி மனம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது?

மன அழுத்தம் மற்றும் வேலைப்பழு அதிகரிப்பதன் காரணமாக மூளையில் இருந்து ஆணுறுப்புக்கு செல்லும் கட்டளைகள் பாதிப்படைகின்றது. ஆணுறுப்புக்கு மூளை அதிகமாக இரத்த ஓட்டத்தை அனுப்ப சொல்லி இடும் கட்டளைகள் மன அழுத்தத்தினால் சென்றடைவதில்லை. இதனால் விறைப்பு தன்மை குறைகிறது.

இளம் வயது பாதிப்பு

இளம் வயது பாதிப்பு

மனம் ஆரோக்கியமாக இல்லாத காரணத்தினால் 90 சதவீத டீன் ஏஜ் வயதினர் விறைப்பு தன்மை குறைபாட்டிற்கு ஆளாகின்றனர்.

நடுத்தர வயது

நடுத்தர வயது

குடும்ப பிரச்சனை, கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை காரணமாக நடுத்தர வயதினர் அதிகளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

வயதானவர்கள்

வயதானவர்கள்

வயது முதிர்ந்த காரணத்தால் பெரும்பாலும் முதியவர்களுக்கு விறைப்பு தன்மை இல்லாமல் போகிறது. மேலும் அவர்களது மனைவி பிரிந்த கவலையினாலும் அவர்களுக்கு விறைப்பு தன்மை பாதிப்பு உண்டாகிறது,

இவைகளும் காரணமாக இருக்கலாம்!

இவைகளும் காரணமாக இருக்கலாம்!

வேலையின்மை, தொழில் நஷ்டம், மன அழுத்தம், உறவுகளுக்குள் சிக்கல், மனதிற்கு பிடித்தவரின் இழப்பு, காதல் பிரிவு, வயதாகிக்கொண்டே போகிறது என்ற எண்ணங்கள், ஆரோக்கிய பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் ஆகியவை விறைப்பு தன்மை இல்லாமல் போவதற்கு காரணமாகின்றன.

மனநல மருத்துவர்

மனநல மருத்துவர்

மனநல மருத்துவரை சந்தித்து உங்களது பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதன் மூலம் மனநலம் காரணமாக விறைப்பு தன்மை கோளாறுகள் உண்டாகியிருந்தால் அவற்றை சரி செய்யலாம்.

பிற சிகிச்சைகள்

பிற சிகிச்சைகள்

சைகோடைனமிக், செக்ஸ் தெரபி, செக்ஸீவல் அண்டிசிக் தெரபி போன்றவற்றை எடுத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளுக்கு பலன் தரும். மருத்துவரின் பரிந்துரைப்படி உங்களுக்கு ஏற்ற சிகிச்சையினை தேர்வு செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How do stress and anxiety cause erectile dysfunction

This content about how do stress and anxiety cause erectile dysfunction
Story first published: Saturday, July 8, 2017, 17:24 [IST]