உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் நீங்கள் ரொம்ப அதிஷ்டசாலி ஏன் தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஒரு சிலர் ஆண் குழந்தை வேண்டும் எனவும் ஒரு சிலர் பெண் குழந்தை வேண்டும் எனவும் விரும்புகிறார்கள். அதற்காக ஆண் குழந்தை தான் பிடிக்கும் எனவோ அல்லது பெண் குழந்தை தான் பிடிக்கும் எனவோ அர்த்தம் இல்லை. எந்த குழந்தை பிறந்தாலும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் அதிஷ்டசாலிகள் ஏன் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆடைகள்

1. ஆடைகள்

பெண் குழந்தைகளை மேலும் அழகுபடுத்திக்காட்ட விதவிதமான ஆடைகள் உள்ளன. கண்களை கவரும் வண்ணங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் என பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் நிறைய உள்ளன. ஆனால் ஆண் குழந்தைகளுக்கான ஆடைகளோ குறைவு தான்.

2. தலைமுடியை அலங்கரிங்க

2. தலைமுடியை அலங்கரிங்க

உங்கள் செல்ல குழந்தையுடன் வெளியே செல்லும் போது அழகான மின்னும் க்ளிப்கள் மற்றும் பூக்கள் என நிறைய அலங்காரப்பொருட்களை கொண்டு உங்கள் பெண் குழந்தையை தேவதை போல அலங்கரிக்கலாம்.

3. பிடித்த பெயர்

3. பிடித்த பெயர்

பெண் குழந்தைகளுக்கு நிறைய பெயர்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான, ஸ்டைலிசான பெயரை வைத்து உங்கள் செல்ல பெண் குழந்தையை அழைப்பது எளிதாகும்.

4. அப்பாவின் பாசம்

4. அப்பாவின் பாசம்

பெண்களுக்கு ஆண் குழந்தைகளை பிடிக்கும், ஆண்களுக்கு பெண் குழந்தைகளை பிடிக்கும். எனவே பெண் குழந்தைகள் அப்பாவின் அதிகமான பாசத்தை பெரும். ஆண்கள் பொதுவாக அதிகமாக மன அழுத்தத்துடன் இருப்பார்கள். பெண் குழந்தைகளால் மன அழுத்தத்தை எளிதில் விரட்டி விட முடியும்.

5. கவனித்துக்கொள்ளுதல்

5. கவனித்துக்கொள்ளுதல்

பெண்கள் ஆண்களை காட்டிலும் இயற்கையாகவே அதிகளவு பாசம், கருணை கொண்டவர்கள். எனவே பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால், பெற்றோர்களுக்கு அதிக பாசமும், உபசரிப்பும் கடைசிவரை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Great Things About Having A Baby Girl

Great Things About Having A Baby Girl
Story first published: Saturday, June 17, 2017, 13:34 [IST]