ஆணுறுப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த செயல்களை தெரிஞ்சு தான் செய்யறீங்களா?

Written By:
Subscribe to Boldsky

ஆணுறுப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? நீங்கள் அதன் ஆரோக்கியத்திற்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் ஒரு சில தவறுகளும், கவனக்குறைவுகளும் தான் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக இருக்கிறது. இந்த பகுதியில் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில செயல்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுறுசுறுப்பான வாழ்க்கை

சுறுசுறுப்பான வாழ்க்கை

ஆய்வுகளில் தினமும் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் மற்றும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும் ஆண்கள் பாலியல் ரீதியாகவும், விறைப்பு தன்மை விஷயத்திலும் மற்றவர்களை விட மேம்பட்டவர்களாக இருக்கிறார்களாம்.

புகைப்பிடித்தல் :

புகைப்பிடித்தல் :

பிரிட்டிஷ் நாளிதள் ஒன்று நடத்திய ஆய்வில், புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு விறைப்பு தன்மையில் நல்ல மாற்றம் ஏற்படுவது பற்றி கண்டறியப்பட்டுள்ளது.

வாய் சுத்தம்

வாய் சுத்தம்

விறைப்பு தன்மையில் பிரச்சனை உள்ள ஆண்கள் பலருக்கு பல் ஈறுகளில் பிரச்சனை இருக்கிறதாம். இதற்கு காரணம், வாயில் உள்ள பாக்டிரியாவானது உடலுக்குள்ளும் பயணித்து, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையதாம்.

போதிய தூக்கமின்மை

போதிய தூக்கமின்மை

நீங்கள் உடலுக்கு போதுமான அளவு ஓய்வை கொடுக்கவில்லை என்றால், உங்களது டெஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். இதனால் உங்களது சதை மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. இந்த அனைத்து விஷயங்களுமே உங்களது ஆணுறுப்பை ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கும்.

குறைவான உடலுறவு

குறைவான உடலுறவு

போதிய அளவு உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் தவறு தான். போதுமான உடலுறவு என்பது தம்பதிகளை பொருத்து வேறுபடும். அமெரிக்க நாளிதள் ஒன்று, வாரத்தில் ஒருமுறைக்கு குறைவாக உடலுறவு வைத்துக்கொள்வதால் விறைப்பு தன்மை பிரச்சனை உண்டாகிறது என்கிறது. ஒருவாரத்தில் மூன்று தடவைகள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.

தர்பூசணி சாப்பிடாமல் இருப்பது

தர்பூசணி சாப்பிடாமல் இருப்பது

தர்பூசணியில் உள்ள முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், சிட்ரூல்லைன்- அர்ஜின்னைன் ஆகும். இது உடலில் பாலியல் மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள நைட்ரிக் அசிட் அளவை மேம்படுத்துகிறது. இது விறைப்பு தன்மை பிரச்சனையை போக்க வல்லது. இதனை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வது சிறப்பு.

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பு

உங்களது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும் அதே சமயம், விந்தணுக்களின் தரமும் குறைந்து கொண்டே போகும். இதற்காக நீங்கள் சத்தான விந்தணுக்களின் தரத்தை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

டிவி பார்ப்பது

டிவி பார்ப்பது

நீங்கள் தொடர்ந்து அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றையே பார்த்து கொண்டிருப்பது கெடுதலை விளைவிக்கும். வாரத்தில் 20 மணிநேரத்திற்கு மேலாக இவற்றை பார்த்தால், உங்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இது உங்களது விந்தணுக்களின் எண்ணிகையை 44 சதவீதம் குறைத்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Habits that are bad for your penis

Daily Habits that are bad for your penis
Story first published: Tuesday, October 10, 2017, 13:30 [IST]