Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
கர்ப்பிணிகள் அதிகமாக மீன் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல விபரீதங்கள்!
சிறுவர் முதல் பெரியவர் வாய் அனைவரும் விரும்பி உண்ணும் அசைவ உணவு என்றால் அது மீனாக தான் இருக்கும். குழந்தைகள் முற்கள் குறைவாக இருக்கும் மீன்களை விரும்பி உண்ணுவார்கள். மீனை அனைவரும் விரும்பி உண்ண முக்கிய காரணம் அதன் வகைகளும் கூட.
விரைவாக கருத்தரிக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய 7 விஷயங்கள்!!!
ஆனால், கர்ப்பகாலத்தில் அதிகமாக மீன் உட்கொள்வது குழந்தையின் உடல்பருமனை அதிகரிக்க செய்கிறது என சமீபத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. சிறு வயது முதலே உடல்பருமன் அதிகரிப்பது பல வகைகளில் உடல்நலத்தை பாதிக்கக் கூடியது ஆகும்.
காண்டம் பயன்படுத்தாமலேயே கருத்தரிப்பதை தடுக்க சில டிப்ஸ்...
எனவே, கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்...

மூளைக்கு நல்லது தான்
மீன் உண்ணுவது மூளைக்கு மிகவும் நல்லது தான். மேலும் இதிலிருக்கும் புரதமும் நமது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது தான். ஆனால், அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது இது உடல்நலத்தில் விபரீதங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மத்தியில்.

மூன்று முறை
வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் மீனை உட்கொள்வது வளரும் சிசுவிற்கு உடல்பருமன் ஏற்படும் அபாயத்தை உண்டாக்குகிறது.

ஆய்வறிக்கை
அமெரிக்காவின் மருத்துவ கூட்டமைப்பு பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கையில் தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக கர்ப்பிணி பெண்கள் மீன் உட்கொள்வது குழந்தைக்கு உடல்பருமன் அதிகரிக்கும் அபாயத்தை உண்டாக்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீட் பல்கலைக்கழகம்
இந்த ஆய்வை கிரீஸில் உள்ள கிரீட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் லீடா (Leda Chatzhi) ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 26,000 கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளை வைத்து நடத்தினார்.

எப்.டி.எ
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மையம் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் மீனை உட்கொள்ள வேண்டாம் என அறிவுரைக்கிறது.

குழந்தைகளின் பி.எம்.ஐ
கர்ப்பகாலத்தில் அதிகளவு மீன் உட்கொள்ளும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம் 2,4,6 வயது என வளர, வளர ஆராய்ச்சி செய்ததில் அவர்களின் பி.எம்.ஐ அளவு மற்ற குழந்தைகளைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகள்
ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளிடம் தான் இந்த தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆராய்ச்சி
இதில் எந்தெந்த மீன்களை எவ்வளவு சாப்பிடலாம் என மேற்கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வாளர் லீடா வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் மீனை உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் அறிவுரைத்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications
