மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது முறையாக நடைபெற்றால் தான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறாவிட்டால், அவர்களின் உடலில் ஏதேனும் பிரச்சனை அல்லது அவர்களின் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அர்த்தம்.

இருப்பினும் இன்றைய காலத்தில் நிறைய பெண்கள் மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி எதற்கு முறையாக நடைபெறுவதில்லை என்று தெரிவதில்லை. மேலும் மருத்துவர்களிடமும் சென்று பரிசோதனை செய்து கொள்வதில்லை. இப்படியே இருந்தால், பிற்காலத்தில் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனை இருந்தால் தவறாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

இங்கு மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் பெண்களின் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மாற்றிக் கொண்டால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

கடுமையான உடற்பயிற்சி

பொதுவாக விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி தவறும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்வதால் தான். இப்படி கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடலில் அழுத்தம் அதிகரித்து, இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாடு குறையும். இதனால் மாதவிடாய் சுழற்சி தடைப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து வந்தாலும், மாதவிடாய் சுழற்சியானது தடைப்படும். ஏனெனில் அந்த மருந்துகளானது ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

மன அழுத்தம்

ஒரு பெண் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளானால், உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்து, அதனால் மாதவிடாய் சுழற்சியிலும் தடை ஏற்படும்.

ஒழுங்கற்ற தூக்கம்

அளவுக்கு அதிகமாக தூங்கினாலோ அல்லது அளவுக்கு குறைவாக தூங்கினாலோ, சுரப்பிகளானது சரியாக செயல்படாமல், ஹார்மோன்களை சரியாக உற்பத்தி செய்யாமல், மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமான எடை

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிக அளவில் இருப்பதால், அவை கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவதை தடுத்துவிடும். இதனால் மாதவிடாய் சுழற்சியானது தடைப்படும்.

குறைவான எடை

6 Things That Interfere And Mess With Your Period

ஒருவேளை உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல், மிகவும் குறைவான எடையைக் கொண்டிருந்தால், உடலுக்கு வேண்டிய ஈஸ்ட்ரோஜென் கிடைக்காமல், மாதவிடாய் சுழற்சியானது நடைபெறாமல் போகும்.

English summary

6 Things That Interfere And Mess With Your Period

The kind of lifestyle you adopt and the food you eat are the two most prominent things that interfere with your period. So let us go about looking at these lifestyle habits and foods that can affect periods.
Story first published: Friday, October 17, 2014, 14:29 [IST]
Subscribe Newsletter