Just In
- 10 hrs ago
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- 10 hrs ago
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- 10 hrs ago
குழந்தைகளுக்கு ஒரு வயதாகும் வரை தெரியாம கூட இந்த ஆரோக்கிய உணவுகளை கொடுத்துறாதீங்க...!
- 12 hrs ago
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
Don't Miss
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கியதால் 5 மாத குழந்தை பரிதாப பலி! நடந்த கொடுமைய நீங்களே பாருங்க!
நம்மை சுற்றி இருக்கும் உலகில் பல தேவையற்ற கற்பிதங்கள் உலாவி கொண்டு இருக்கின்றன. சில கற்பிதங்கள் பெரிய அளவில் நம்மை பாதிப்பதில்லை. ஆனால், ஒரு சில கற்பிதங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறி விடுகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆனால், இதை மீறிய சம்பவம் ஒன்று இங்கு நடந்துள்ளது. அதை கேட்டால் யாராக இருந்தாலும் கண்ணீரே விட்டு விடுவர். வெறும் 5 மாதமே நிரம்பிய ஒரு ஆண் குழந்தைக்கு ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் சடங்கில் தான் இந்த விபரீத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. எதனால் இது ஏற்பட்டது? இப்படி ஆணுறுப்பின் மேல் தோலை நீக்குவது சரிதானா? இதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்?... போன்ற பல தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சடங்கு!
பல இடங்களில் சடங்கு, பாரம்பரியம், பண்பாடு என்கிற பெயரில் பல்வேறு மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது பல பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது என்பது தான் இதில் வருத்தப்பட கூடிய விஷயமே.
இதே போன்ற நிகழ்வு தான் இத்தாலியிலும் நடந்துள்ளது. வெறும் 5 மாத குழந்தைக்கு தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

5 மாத குழந்தை!
சில மதங்களில் ஆணுறுப்பை நீக்குவது மிக முக்கியமான சடங்காக கருதப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சடங்கை 5 மாத குழந்தைக்கு செய்த போது தான் மிக அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரையே இந்த சடங்கு காவு வாங்கியுள்ளது. இதற்கான காரணம் தான் அதிர வைக்கும் வகையில் உள்ளது.

வீட்டிலே முயற்சி
பொதுவாக இது போன்ற அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு மருத்துமனைகளையே நாடுவார்கள். ஆனால், இந்த குழந்தையின் பெற்றோர் பணத்தை கருத்தில் கொண்டு வீட்டிலே, பொது சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை கொண்டு இந்த சடங்கை செய்துள்ளனர்.
MOST READ: 28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்

மாரடைப்பு
இந்த அறுவை சிகிச்சை தொடங்கிய சில மணி நேரங்களில் குழந்தைக்கு இதய துடிப்பு பாதித்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டது. குழந்தை மயங்கிய நிலையில் உள்ளது என இந்த பெற்றோர்கள் நினைத்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பரிதாப பலி!
ஆனால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உடன் குழந்தை எப்போதோ இறந்து விட்டதாக கூறி விட்டனர். இதை பற்றி மருத்துவர்கள் கூறுகையில், "இத்தாலியில் ஒரு வருடத்திற்கு 5000 ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் அறுவை சிகிச்சைகள் நடந்து வருகின்றன. ஆனால், இதில் பாதிக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் முறையற்ற வகையில் நடந்து வருவதாக கூறுகின்றனர்.

முந்தைய பலி!
இது போன்ற ஒரு கொடூர நிகழ்வு தான் கடந்த டிசம்பர் மாதம் ரோமில் நடந்துள்ளது. இதுவும் முறையற்ற வகையில் வீட்டிலே செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தான்.
இரட்டை குழந்தைகளுக்கு செய்யப்பட்ட ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கும் சடங்கில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது. மேலும், ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறதாம்.

பணம் தான் காரணமா?!
இது போன்ற நிகழ்வுகள் உலகெங்கும் நடக்க பணம் தான் முக்கிய காரணமாக உள்ளது என மக்கள் கருதுகின்றனர். இத்தாலியில் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் €4,000 ஆகுமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 3 லட்சம் ஆகுமாம்.

பொது சுகாதார மையம்
இது போன்ற அறுவை சிகிச்சைகளை பொது சுகாதார மையங்களின் மூலம் செய்தால் வெறும் €20 தான் ஆகுமாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 1500 ரூபாய் தான்.
இதனால் தான் மக்கள் அவரவர் வீட்டிலோ அல்லது பொது சுகாதார மைங்களிலோ இது போன்ற சடங்குகளை செய்து விபரீத முடிவை தேடி கொள்கின்றனர்.
MOST READ: தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?

அபாயங்கள்!
இது போன்ற சடங்குகள் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக ஆணுறுப்பில் சாகும் வரை வலி இருந்து கொண்டே இருக்குமாம்.
ஒவ்வொரு முறை உடலுறவு வைத்து கொள்ளும் போதும் பயங்கர வலி ஆணுறுப்பில் உண்டாகும். சில சமயங்களில் இது போன்ற உயிரை பறிக்கும் நிகழ்வுகள் கூட அரங்கேற கூடும்.