For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு பல் முளைத்தல் தாமதமாக காரணம் என்ன? அதன் விளைவுகள்!

பல் முளைத்தல் என்பது குழந்தைகளின் வளர்ச்சியின் முக்கிய காலகட்டம்; குழந்தைகளுக்கு பல் முளைத்தல் தாமதமாக காரணம் என்ன மற்றும் அதன் விளைவுகள் யாவை என்று இங்கு படிக்கலாம்.

|

குழந்தைகள் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு மாற்றமும் மிகவும் முக்கியமானது; உதாரணத்திற்கு குழந்தைகள் பிறந்து தாய்ப்பால் குடிப்பது, தலை நிற்பது, குப்புற விழுவது, தவழ்வது, உட்காருவது, பல் முளைப்பது, நடப்பது என ஒவ்வொரு வளர்ச்சி மாற்றமும் மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் வளர்ச்சி சரியாக அந்தந்த மாதங்களில், அந்தந்த நேரத்தில் கண்டிப்பாக நிகழ வேண்டியது அவசியம்.

causes of late teething or delayed teething in infants

அதாவது குழந்தைகளின் தலை நிற்பது மூன்றாம் மாதம் நடந்திருக்க வேண்டும்; இது போல் ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கியமான வளர்ச்சி மாற்றம்!

முக்கியமான வளர்ச்சி மாற்றம்!

இந்த மாற்றங்களில் பெரும்பாலான பெற்றோர்களில் தங்கள் குழந்தையில் பல் முளைத்தலின் வளர்ச்சி தாமதமாக நிகழ்வதாக நினைக்கின்றனர். குழந்தைகளின் பல் முளைத்தலை கவனியாத, அதை பற்றி கவலை கொள்ளாத பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியாதது, அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது தான் காரணமாக உள்ளது.

குழந்தையின் பல் முளைத்தல் வளர்ச்சி மாற்றம் மிகவும் முக்கியமானது; அது தடைபட்டால், என்னென்ன பிரச்சனைகள், விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிப்பில் படிக்கலாம்.

பல் வளர்ச்சி தாமதமாதல்?!

பல் வளர்ச்சி தாமதமாதல்?!

குழந்தைகளின் பல் வளர்ச்சி தாமதமாதல் என்றால் என்ன என்பதை பெற்றோர்கள் முதலில் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ச்சியில் பற்கள் முளைத்தல் என்பது குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அல்லது எட்டு மாத காலகட்டத்தில் கண்டிப்பாக தொடங்க வேண்டும்; இல்லையேல் ஒரு வயதை எட்டும் முன்னராவது பற்கள் முளைத்தல் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இந்த காலகட்டங்களில் நிகழாமல், குழந்தையின் பல் முளைத்தல் தாமதமானால், அதை தான் தாமதமான பல் முளைத்தல் அல்லது குழந்தைகளின் பல் முளைத்தல் தாமதமாதல் என்று கூறுகிறோம். இவ்வாறு குழந்தையின் பல் முளைத்தல் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று முதலில் பார்க்கலாம்.

பரம்பரை!

பரம்பரை!

முன்னோர்களில் யாருக்கேனும் இந்த பல் முளைத்தல் தாமதமாதல் பிரச்சனை இருந்திருந்தால், அது மரபணுக்கள் வழியாக கடத்தப்பட்டு இன்றைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகளை பாதிக்கலாம். ஆனால், எந்த தலைமுறையில் நிகழும், யாருக்கு நடக்கும் என்று யாராலும் கூற இயலாது. இந்த பிரச்சனையை சரி செய்ய கண்டிப்பாக மாற்று வழிகளை மருத்துவ அறிவியல் கண்டறிந்திருக்கும்; ஆகையால் கவலையை விடுங்கள் பெற்றோர்களே!

ஹைப்போதைராய்டிசம்

ஹைப்போதைராய்டிசம்

குழந்தைகள் பிறக்கும் பொழுதே அவர்களின் உடலில் தைராயிடு பிரச்சனை இருந்தால், அது குழந்தைகள் வளரும் பொழுது குழந்தையின் உடலில் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக குழந்தையின் வளர்ச்சி மாற்றத்தில் ஏதேனும் பாதிப்புகள் தைராயிடிசத்தால் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

உணவு

உணவு

குழந்தைகளின் பல் வளர்ச்சிக்கு சரியான உணவு மற்றும்ந ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளின் பல் வளர்ச்சிக்கு முக்கிய தேவை கால்சியம் சத்துக்கள் தான். அது குழந்தைப்பருவத்தில் தாயின் தாய்ப்பால் மூலமே போதிய அளவு கிடைத்து விடும். குழந்தைகளுக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்க வில்லை எனில், கிடைத்த தாய்ப்பாலில் சத்துக்கள் இல்லையெனில் (தாய் சத்தான உணவுகளை உண்ணவில்லை என்றால் இந்த நிலை ஏற்படலாம்) குழந்தைக்கு உணவு பற்றாக்குறையால் பல் முளைத்தலில் பிரச்சனை ஏற்படலாம்.

விளைவுகள்!

விளைவுகள்!

குழந்தைக்கு பல் முளைத்தல் மிகவும் தாமதமானால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் என்று இப்பொழுது பார்க்கலாம். குழந்தைக்கு 6 மாதத்திற்கு மேலாக திட உணவுகள் அளிக்கப்படுகின்றன; குழந்தையின் பல் வளர்ச்சி ஒரு வயது வரை ஏற்படாமல் இருந்தால், உணவினை மென்று விழுங்குதல் மிகவும் கடினமாகலாம். மேலும் உட்கொண்ட உணவுகள் பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை ஏற்படுத்தி ஈறுகளை சிதைத்து பற்கள் முளைக்காத வண்ணம் பிரச்சனையை உண்டு பண்ணலாம்.

குழந்தை பருவத்திலேயே பல் செட் மாட்டி, குழந்தையின் வாய் வாழ்நாள் முழுதும் பொக்கை வாயாக மாறும் நிலை உண்டாகலாம். அப்படியே தாமதமாக பல் முளைத்தாலும் பலமில்லாத பற்கள், எத்து பற்கள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

தீர்வு!

தீர்வு!

குழந்தையின் வளர்ச்சியை சரியாக கண்காணித்து, குழந்தைக்கு தகுந்த நேரத்தில் வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் வளர்ச்சியை சீராக்க செய்ய வேண்டிய விஷயங்களை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தையின் பல் முளைத்தலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் உரிய நேரத்தில் கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், சரி செய்து விடலாம். பல் முளைத்தல் மட்டுமின்றி குழந்தையின் வளர்ச்சியில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெற்று, தெளிவது நல்லது.

எனவே பெற்றோர்கள் தங்கள் கடமையை, குழந்தை வளர்ப்பை கவனமாக மேற்கொண்டு குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறோம்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Causes Of Late Teething In Babies

What Are The Causes Of Late Teething In Babies
Story first published: Thursday, August 23, 2018, 12:59 [IST]
Desktop Bottom Promotion