For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கிறீர்களா? இப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய, உங்களுக்கான சில டிப்ஸ்

By Hemalatha
|

கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு வித எதிர்ப்பார்ப்போடுதான் அந்த நாட்களை தொடங்குவாள். பயம், ஏக்கம், மகிழ்ச்சி என எல்லாமுமே சேர்ந்து கொள்ளும்.

கர்ப்ப காலத்தில் உங்களுடன் இன்னொரு ஜீவனும் தன் பயணத்தை ஆரம்பிக்கின்றது. ஆகவே மிக கவனமாக பொறுப்பாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் குடும்பத்தில் ஒவ்வொருவருடைய அக்கறையும் அந்த பெண்ணிற்கு தேவைப்படுகிறது.

Natural remedies for pregnancy woes

நல்ல புத்தகங்கள் படிப்பது, இனிமையான இசையை கேட்பது, சத்துள்ள உணவுகளை உண்பது , மனதை கவலைகள் இல்லாம வைத்துக் கொள்வது என இருந்தால் பிறக்கும் குழந்தை அறிவாளியாக பிறக்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த சமயங்களில் பெண்களுக்கென்றே சில உபாதைகள் ஆரம்பிக்கும். அதனை எவ்வாறு கையாள்வது, எந்த மாதிரி தீர்வுகள் கிடைக்கும் என பார்க்கலாம்.

தலைவலி :

முதல் மூன்று மாத காலங்களில் புதிய ஹார்மோன்கள் உடலுக்குள் உருவாகும். ஆகவே இதனால் உடல் சில நேரங்களில் தடுமாற ஆரம்பிக்கும். அனத நேரங்களில் உடல் உபாதைகள் வரலாம். அதில் தலைவலியும் ஒன்று. சரியான சமயத்தில் உணவுகளை உண்டு, நன்றாக தூங்கினால், தலை வலி வருவதை தடுக்கலாம்.

அப்படியே வந்தாலும், அடிக்கடி சூடான ஒத்தடம் கழுத்து மற்றும் நெற்றியில் கொடுத்தால், தலைவலி குறையும். தலை வலிதானே என்று பாராசிடமாலை எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் சாப்பிடும் சின்ன துரும்பும் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் போகும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாந்தி :

முதல் 12 வாரங்களுக்கு வாந்தி இருக்கும். சிலருக்கு நாள் முழுவதும் இருக்கும். வாந்தி வருகிறதே என்று உண்ணாமல் இருந்துவிடக் கூடாது. அது கருவின் வளர்ச்சியை பாதிக்கும். வாந்தியை தடுக்கும் உணவுவகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மனதிற்கு பிடித்த உணவினை அதிகம் கொள்ளுங்கள். சத்து நிறைந்தது என பிடிக்காததையும் சாப்பிட்டால், வாந்தி ஏற்பட்டு, நீரிழப்பு ஏற்படும். புதினா, இஞ்சி ஆகியவை வாந்தியை தடுக்கும். பசியினை தூண்டும். ஆக்வே அவைகளை அதிகம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நெஞ்செரிச்சல் :

வயிற்றில் குழந்தை வளர வளர, வயிற்றிலுள்ள என்சைம் அதிகமாய் சுரக்க ஆரம்பிக்கும். அதனால் நெஞ்செரிச்சல் அடிக்கடி வரும். இதற்காக கடைகளில் விற்கும் நெஞ்செரிச்சல் மருந்துகளை குடிக்கக் கூடாது.

அதில் சேர்க்கும் பொருட்கள் ஆபத்து நிறைந்தவை. சோற்றுக் கற்றாழை ஜூஸ் குடிப்பது நெஞ்செரிச்சலை குறைக்கும். இள நீர் மிக நல்லது. அது அமிலத் தன்மையை சமன் செய்யும். வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, மறு நாள் அந்த நீருடன் சேர்த்து வெந்தயதை சாப்பிட்டாலும் அசிடிடி குறையும்.

மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வு :

சில பெண்களுக்கு காரணம் இல்லாமல் மனம் சோர்வடைவது போலவே இருக்கும். இதற்கு சரியான உணவுப் பழக்கமும், தூக்கமும் இல்லாமல் இருப்பதே காரணம்.

அதேபோல் எளிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடல் சோர்வு இருப்பதற்கு ரத்த அளவு குறைந்திருக்கலாம். நிறைய சிட்ரஸ் வகை பழச் சாறுகளையும், இரும்பு சத்தி நிறைந்த உணவுகளையும் உண்டால், ரத்த உற்பத்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சிறுநீர் தொற்று :

கர்ப்ப காலத்தில் நிறைய பெண்கள் சிறுநீர் தொற்றிற்கு ஆளாவார்கள். இதற்கு போதிய அளவு நீர் குடிக்காததே காரணம். நிறைய திரவ உணவுகள் மற்றும் நீரினை அதிகமாய் குடித்தால், சிறு நீர் தொற்றுவை போக்கலாம்.

கர்ப்ப காலங்களில் பயப்பட தெவையில்லை. நம் முன்னோர்கள் எந்த வித மருத்துவ வசதி இல்லாமலே பல குழந்தைகளை தைரியமாக பெற்றிருக்கிறார்கள். இப்போது பக்கத்திலேயே மருத்துவர், போதிய அளவு வசதிகள், தேவையான பாதுகாப்பு என நம்மை சுற்றி இருக்கும்போது தைரியமாக குழந்தையை பெற்றிடுங்கள்.

English summary

Natural remedies for pregnancy woes

Natural remedies for pregnancy woes
Desktop Bottom Promotion