For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

|

நவகிரகங்களில் சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 06:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசிக்கு செல்லவிருக்கும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சுக்கிரனின் நிலை உங்களை மேலும் நம்பிக்கையுடனும், அழகாகவும், முழு வாழ்க்கையாகவும் மாற்றும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பாசமாக இருப்பீர்கள். இது அவர்களுடனான உங்கள் உறவை வளர்க்க உதவும். காதலர்கள் காதல் வாழ்க்கையில் பேரின்பம், மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை அனுபவிக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு தங்கள் துணையுடனான உறவு வலுவாகும். திருமணமாகாதவர்கள், தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறலாம். இக்காலத்தில் உங்கள் அழகை மேம்படுத்துவதற்காக சேமிப்பின் பெரும்பகுயை செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக, இது நல்ல காலம். படைப்பாற்றல், ஊடகம், திரைப்படத் துறை ஆகிய துறைகளில் பணிபுரியும் நபர்கள் இந்த காலத்தில் அதிக ஆதரவையும் வளத்தையும் காணலாம். வணிகர்கள், இக்காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகளில் கையெழுத்திடலாம். நகைகள் மற்றும் வடிவமைப்பு தொடர்பான தொழிலில் பணிபுரிபவர்கள் இந்த காலகட்டத்தில் அதிக லாபத்தைக் காணலாம். ஒட்டுமொத்தமாக, இந்த பெயர்ச்சி மிகவும் நம்பிக்கைக்குரியது. ஆனால் சில நேரங்களில் மற்றவர்களை மகிழ்விக்கும் உணர்வால் மூழ்கிவிடலாம், இது கவனச்சிதறல்களை உருவாக்கி உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த போக்கில் சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டின் வழியே சுக்கிரன் செல்கிறார். இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய நிகழ்வுகளை ஏற்படுத்தும். சுக்கிரனின் நிலை உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளைக் கொண்டு வரக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் முழு பொறுப்பையும் கவனிப்பையும் எடுக்க வேண்டும். பணிபுரிபவர்கள் வேலை செய்வதற்கும், வெளிநாட்டில் குடியேறுவதற்கும் சில வாய்ப்புகளைப் பெறலாம். இக்காலத்தில் நீங்கள் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருப்பீர்கள். இக்காலத்தில் எந்தவிதமான வாதங்களிலும் மோதல்களிலும் ஈடுபடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், உங்கள் எதிரிகள் இதை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் சர்ச்சைகளில் சிக்கவும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கைப் பொறுத்தவரை, இக்காலத்தில் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இது உங்கள் இருவருக்குமான பிணைப்பை பலப்படுத்தும். இக்காலத்தில் கடன் அதிகமாக வாங்குவதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால், அது பிற்காலத்தில் செலுத்த கடினமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் முயற்சிகளில் வெற்றிபெற விரும்பினால், கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்த வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக, வாய்ப்புகள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான காலம். ஆனால் உங்கள் செலவு மற்றும் ஆரோக்கியம் குறித்து கவனமாக இருங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டின் வழியே சுக்கிரன் செல்கிறார். இதனால் நீங்கள் உங்கள் மூத்த சகோதர சகோதரிகளுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் மூத்த உடன்பிறப்புகளுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். இந்த சுக்கிர பெயர்ச்சி காதல் உறவில் பயனளிக்கும். மேலும் உங்கள் உறவில் நீங்கள் தனித்துவமான அனுபவத்தை பெறுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளை பெற வாய்ப்புள்ளது. வெளிநாட்டு இணைப்புக்களைக் கொண்டவர்கள் இக்காலத்தில் நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 11 மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இவர் இப்பெயர்ச்சியின் போது கடக ராசியின் 10 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் உங்களுக்கு முதன்மையானதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் அன்பானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தொழிலைப் பொறுத்தவரை வளர்ச்சி காண்பீர்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். திருமணமானவர்கள், தன் துணையின் பெயரில் புதிய முயற்சியைத் தொடங்கலாம். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் நிறைவேற்ற உங்கள் நண்பர்களின் ஆதரவை எதிர்பார்க்கலாம். இக்காலத்தில் ஒரு சொத்தில் முதலீடு செய்ய திட்டமிடலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இவர் 9 ஆவது வீட்டின் வழியே இடம் பெயர்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் தொழில் வாழ்க்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை காரணமாக, நீண்ட பயணம் அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணமான தம்பதிகள் பிக்னிக் செல்ல திட்டமிடலாம். வயதானவர்கள் யாத்திரை செல்லலாம். பயணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் செலவுகள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். உங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 9 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இவர் இப்பெயர்ச்சியின் போது 8 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் இக்காலத்தில் உறவில் மன அழுத்த சூழ்நிலைகளையும், எதிர்பாராத போராட்டங்களையும் எதிர்கொள்வீர்கள். எனவே உங்கள் உறவுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தற்போதைய சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக உங்கள் உறவின் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் சர்ச்சைகள் அல்லது வாதங்களில் சிக்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு பாதிக்கப்படக்கூடும். இப்பெயர்ச்சி காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு மற்றும் பலன் கிடைக்காது என்பதால் அதிகம் போராட வேண்டியிருக்கும் மற்றும் சில கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 8 மற்றும் 1 ஆவது வீட்டின் அதிபதி தான் சுக்கிரன். இவர் இப்பெயர்ச்சியின் போது 7 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் இக்காலத்தில் உறவுகளைப் பொறுத்தவரை வெற்றிகரமான முடிவுகளை வழங்கும். திருமணமாகாதவர்கள் உறவில் நுழைவதற்கு சில வாய்ப்புகள் உள்ளன. உங்களின் நம்பிக்கையான அணுகுமுறை உங்கள் தொழில் வாழ்க்கையில் சாதகமான முடிவுகளை வழங்கக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் மாமியார் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மாமியாரின் உடல்நல பிரச்சனைகள் காரணமாக நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். மேலும் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதி சுக்கிரன். இவர் இப்பெயர்ச்சியின் போது 6 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக எதிர்பார்த்த வேலையை சரியான நேரத்தை முடிக்க முடியாது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு ஏற்ப விஷயங்கள் நடக்காத போது புகார் அளிப்பதைத் தவிர்த்திடுங்கள். திருமணமானவர்கள், தங்கள் துணையின் உடல்நிலை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். உங்கள் துணையின் உடல்நிலைக்காக அதிக தொகையை செலவிட வேண்டியிருக்கும். உங்கள் கூட்டுத் தொழில் வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கலாம். இது உங்கள் கூட்டாளருடனான உறவின் அழகைக் கெடுக்கும். எனவே உங்கள் கூட்டாளருடன் உரையாடும் போது சொற்களைத் தேர்ந்தெடுத்து பார்த்து பேச அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 6 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதி சுக்கிரன். இவர் பெயர்ச்சியின் போது 5 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் உறவைப் பொறுத்தவரை சிறந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள், உறவில் நுழைய வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் அல்லது காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவார்கள். இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புடன் இருப்பார்கள். உங்கள் படிப்புக்காக நீங்கள் செலவிடுவீர்கள். இக்கால கட்டத்தில் இசை மற்றும் நடன பயிற்சிகளில் சேரலாம். மொத்தத்தில், இக்காலம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும் அற்புத காலம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 5 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதி சுக்கிரன். இப்பெயர்ச்சியின் போது இவர் 4 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். இக்காலத்தில் புதிய வாகனம் வாங்கலாம் அல்லது சொத்தில் முதலீடு செய்யலாம். இக்காலம் தொழில் வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புகள் உள்ளன. இக்காலத்தில் உங்கள் நிதி நிலையை மேம்படுத்த ஒரு முறையான முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். இந்த சுக்கிர மாற்றம் உங்கள் உறவுக்கு உறுதியளிக்கிறது, மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் காதலியுடனான நல்லுறவில் வளர்ச்சியைக் காண்பீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 4 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதி சுக்கிரன். இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் 3 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் எழுத்து, ஊடகம், நடிப்பு மற்றும் வடிவமைத்தல் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த நேரத்தில் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் பெரும் வெற்றியைக் காண்பார்கள். உங்கள் துணையுடன் குறுகிய பயணம் மேற்கொள்வதற்கு இக்காலம் சிறந்தது. இக்காலத்தில் உங்கள் துணைக்கு புதிய சாதனத்தை பரிசாக அளிப்பீர்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி ரீதியாக, இக்காலம் உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும். உங்கள் குடும்பத்துடன் பயணத்தை திட்டமிடுவீர்கள். இது உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 3 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதி சுக்கிரன். இவர் இப்பெயர்ச்சியின் போது 2 ஆவது வீட்டின் வழியே செல்கிறார். இதனால் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு உங்களின் மோசமான பேச்சால் பாழாகலாம். எனவே அன்பானவர்களுடன் உரையாடும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இக்காலத்தில் உங்கள் இளைய உடன்பிறப்புகளுக்காக செலவிடலாம். அதோடு இப்பெயர்ச்சி காலத்தில் திடீர் செலவுகளுக்கு சில வாய்ப்புகள் உள்ளன. எனவே செலவுகளை கண்காணித்து புத்திசாலித்தனமாக செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் அன்பானவர்களுடன் பழகும் போது மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது நல்லது. உங்கள் துணையிடம் அதிக அக்கறை காட்டுவது அவர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Venus Transit in Aries on 10 April 2021 Effects on Zodiac Signs in Tamil

Venus Transit in Aries Effects on Zodiac Signs in tamil: The Venus Transit in Aries will take place on 10 April 2021. Learn about remedies to perform in tamil.