For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!

புது வருடத்தில் நாம் அனைவரும் வாங்கும் முதல் பொருள் காலண்டர்தான். புதுவருட காலண்டர் வாங்குவது மிகவும் எளிதானது ஆனால் அதற்கும், வாஸ்துவிற்கும் உள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியுமா?

|

ஒருவழியாக 2019 முடிந்து 2020 தொடங்கப்போகிறது, இந்த ஆண்டு பல போராட்டங்களுடனும், மகிழ்ச்சியான தருணங்களுடனும் கடந்துவிட்டது. வரப்போகிற ஆண்டு பல எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது. புது வருடத்தில் நாம் அனைவரும் வாங்கும் முதல் பொருள் காலண்டர்தான். புதுவருட காலண்டர் வாங்குவது மிகவும் எளிதானது ஆனால் அதற்கும், வாஸ்துவிற்கும் உள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியுமா?

The right place for hanging the new year calendar by

வாஸ்து சாஸ்திரத்தில் புது காலண்டரை எங்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் புது காலண்டர் வாங்கவில்லை என்றாலும் வருடம் முடிந்த பிறகு பழைய காலண்டரை ஒருபோதும் உங்கள் வீட்டிற்குள் வைத்திருக்கக்கூடாது. இது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். மேலும் புது காலண்டரை தவறான இடத்தில் மாட்டுவதும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்கள் வீட்டில் எங்கு காலண்டரை மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆற்றலைக் குறைக்கும்

ஆற்றலைக் குறைக்கும்

உங்கள் வீட்டில் பழையக் காலண்டரை வைத்திருப்பது உங்களின் இல்லத்தில் இருக்கும் அனைத்து ஆற்றல்களையும் உறிஞ்சும், இதனால் நீங்கள் எப்பொழுதும் சோர்வாகவும், களைப்பாகவும் உணரலாம். ஒருவர் எப்பொழுதும் தனது கடந்த காலத்தை அவருக்கு பின்னால் விட்டுவிட்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

புதிய காலண்டர்

புதிய காலண்டர்

எனவே, உங்கள் பழைய காலெண்டரை உடனடியாக உங்கள் வீட்டிலிருந்து அகற்றிவிட்டு புதிய ஒன்றைத் தொங்க விடுங்கள். இது புதிய ஆற்றலைக் கொண்டுவரும் மற்றும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும். உங்கள் வீட்டின் இடம் மற்றும் வசதியை கருத்தில் கொண்டு காலண்டர் மாற்றும் இடத்தை தேர்வு செய்யவும்.

தெற்கு திசை

தெற்கு திசை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்தவொரு பொருளையும் தெற்கு திசையில் தொங்கவிடக்கூடாது. நேரத்தைக் குறிக்கும் கடிகாரம், நாட்களைக் காட்டும் நாட்காட்டி என அனைத்தையும் ஒருபோதும் தெற்கு திசையில் தொங்கவிடக் கூடாது. இதற்கு மாற்றாக வடக்கு திசையில் காலண்டரை வைக்கலாம். கிழக்கு, மேற்கு என அனைத்து திசையும் நேர்மறை ஆற்றலை குறிப்பதாகும்.

MOST READ: அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நீங்கள் படங்களுடன் இருக்கும் காலண்டரை பயன்படுத்த விரும்பினால் அதில் நிர்வாணம், வன்முறை, வேதனைப்படும் மிருகங்கள் போன்றவற்றின் படம் இருக்கக்கூடாது. இந்த படங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்புகின்றன மற்றும் சிறு குழந்தைகளின் மனதில் மோசமான தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த புத்தாண்டில் உங்கள் வீட்டை மாற்றியமைக்க நினைத்தால் அதனை சரியாக செய்யுங்கள்.

கதவுகள்

கதவுகள்

உங்கள் வீட்டின் நுழைவாயிலில், 2 கதவுகளுக்கு மேல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக ஒரு வீட்டின் நுழைவாயிலில் ஒரு கதவு மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் உங்கள் வசதிக்காக கதவின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் அதன் எண்ணிக்கையை இரண்டிற்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மெயின் கேட்

மெயின் கேட்

உங்கள் வீட்டின் மெயின் கேட் தென்மேற்கு தவிர வீட்டின் எந்த திசையிலும் இருக்கலாம். உங்கள் மெயின் கேட் வீட்டின் மற்ற நுழைவாயில்களை விட பெரியதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

MOST READ: இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?

கடல் உப்பு

கடல் உப்பு

உங்கள் வீட்டில் நல்ல வாஸ்துவை கொண்டுவரும் சில பொருட்கள் கடல் உப்புகள், நீல விளக்குகள், மஞ்சள் உடைகள் மற்றும் வாசனை திரவிய மெழுகுவர்த்திகள் ஆகும். சிறந்த முடிவுகளுக்காக இவற்றை உங்கள் வீட்டின் உட்புறங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்தவும்.

கண்ணாடி

கண்ணாடி

அழுக்கு கண்ணாடிகள் இருள் மற்றும் மனச்சோர்வை அழைக்கின்றன, எனவே உங்கள் கண்ணாடியை ஈரமான துணியால் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். தூங்கும்போது உங்கள் கண்ணாடியை மூடிவைப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் இது உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழைவதைத் தடுக்கும்.

MOST READ: நாம படத்துல பார்த்த டைனோசர் எல்லாமே பொய்யா? உண்மையான டைனோசர்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா?

சமையலறை

சமையலறை

உங்கள் சமையலறை தென்மேற்கு திசையில் இருப்பது, உங்கள் சமயலறை எப்பொழுதும் நறுமணமாகவும், அழுக்கில்லாமலும் இருக்கம்படி பார்த்துக் கொள்ளவும். உங்கள் சமையலறை எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ உங்கள் வீட்டில் அவ்வளவு நேர்மறை ஆற்றல் பரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Shastra: The Right Place For Hanging The New Year Calendar

Read to know what is the right place for hanging the new year calendar by Vasthu Shastra
Story first published: Wednesday, December 11, 2019, 17:58 [IST]
Desktop Bottom Promotion