For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் தினமும் காலையில் செய்யும் இந்த வாஸ்து தவறுகள் அந்த நாளை துரதிர்ஷ்டமான நாளாக மாற்றிவிடுமாம்...!

வாஸ்து சாஸ்திரத்தின் படி காலை நேரத்தில் நாம் செய்யும் சில சாதாரண தவறுகள் அன்றைய நாளின் அதிர்ஷ்டத்தை சிதைக்கும் என்று கூறப்படுகிறது.

|

ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பும், முயற்சியும் போலவே அதிர்ஷ்டமும் முக்கியமானதுதான். ஏனெனில் உழைப்பும், முயற்சியும் நிச்சயமான வெற்றித்யை தரும்போது அதிர்ஷ்டம் வேகமான வெற்றியைத் தரும். இது மூன்றும் இணையும்போது வேகமான, உறுதியான வெற்றியை நீங்கள் அடைவது உறுதி. உழைப்பும், முயற்சியையும் போல அதிர்ஷ்டமும் நமது கைகளில்தான் உள்ளது.

Vastu mistakes we make almost every morning

ஒவ்வொரு நாளும் விழிக்கும் போது அன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக கழிய வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவோம். வாஸ்து சாஸ்திரத்தின் படி காலை நேரத்தில் நாம் செய்யும் சில சாதாரண தவறுகள் அன்றைய நாளின் அதிர்ஷ்டத்தை சிதைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் காலை நேரத்தில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை நேரத்தை செல்போனுடன் தொடங்கக்கூடாது

காலை நேரத்தை செல்போனுடன் தொடங்கக்கூடாது

கிட்டத்தட்ட அனைவருமே இப்போது செல்போனுக்கு அடிமையாக மாறிவிட்டோம். அனைவரும் காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது போனைத்தான். அதில் ஏதாவது மோசமான செய்தியோ அல்லது எதிர்மறை கருத்துக்களோ வந்திருந்தால் அன்றைய நாளே நமக்கு சோகமான நாளாக மாற வாய்ப்புள்ளது. எனவே தினமும் காலை எழுந்தவுடன் போனை நோண்டாமல் கண்ணாடியை பார்த்து உங்களிடம் நீங்களே நேர்மையறையாக பேசுங்கள். இது உங்களுக்கு புது ஆற்றலை வழங்கும்.

 உங்களுக்கு திருப்தி இல்லாத ஆடைகளை அணியாதீர்கள்

உங்களுக்கு திருப்தி இல்லாத ஆடைகளை அணியாதீர்கள்

புதிய உடையோ அல்லது பழைய உடையோ உங்களுக்கு திருப்தி தராத உடையை அன்றைக்கு அணியாதீர்கள். குறிப்பாக முக்கியமான வேலை தொடர்பாக வெளியே செல்லும்போது உங்களுக்கு பிடிக்காத ஆடையை கண்டிப்பாக அணியக்கூடாது. கண்ணாடியில் உங்களை பார்த்தால் உங்களுக்கு பிடிக்க வேண்டும். இது உங்கள் தன்னம்பிக்கையை இருமடங்கு அதிகரிக்கும்.

 உடைந்த கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது

உடைந்த கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது

எவ்வளவு விலை உயர்ந்த கோப்பையாக இருந்தாலும் சரி, உங்களுக்கு மிகவும் பிடித்த கோப்பையாக இருந்தாலும் சரி அது உடைந்து விட்டால் அதற்கு பிறகு அதனை பயன்படுத்தக்கூடாது. இது உங்கள் நாளை துரதிர்ஷ்டத்துடன் தொடக்கி வைக்கும்.

MOST READ:இலங்கையை உண்மையில் எரித்தது அனுமன் அல்ல பார்வதி தேவியின் சாபம்தான் தெரியுமா?

உங்கள் பேக்கில் இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

உங்கள் பேக்கில் இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

ஒவ்வொரு பொருளும் தனது அளவிற்கு ஏற்ப தன்னைச்சுற்றி ஆற்றலை உருவாக்கக்கூடும். நீண்டகாலம் உங்கள் பையில் இருக்கும் பொருட்கள் எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். எனவே உங்கள் பையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்வது உங்களை சுற்றி இருக்கும் எதிமறை ஆற்றலை குறைக்கும்.

எப்போதும் உங்களுடன் தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும்

எப்போதும் உங்களுடன் தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும்

நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி உங்களுடன் எப்போதும் தண்ணீர் வைத்துக்கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தண்ணீர் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய ஒன்றாகும். தண்ணீர் உங்கள் அருகில் இருக்கும்போது அது உங்களை அமைதியாக வைத்திருப்பதோடு உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டும்.

வீட்டை விட்டு வெளியேறும்போது வெறும் வயிற்றுடன் போகக்கூடாது

வீட்டை விட்டு வெளியேறும்போது வெறும் வயிற்றுடன் போகக்கூடாது

இந்த விதியை மட்டும் ஒருபோதும் மீறக்கூடாது. காலை உணவு உங்களுக்கு தேவையான ஆற்றலை மட்டும் வழங்குவதில்லை, உங்களின் அந்த நாளுக்குத் தேவையான அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறது. வெறும் வயிற்றில் வெளியே செல்பவர்கள் எதிர்மறை சக்திகளை ஈர்ப்பார்கள்.

 குழந்தையை எழுப்ப கத்தவோ/அடிக்கவோ கூடாது

குழந்தையை எழுப்ப கத்தவோ/அடிக்கவோ கூடாது

உங்கள் நாளை உங்கள் குழந்தையை அடித்து படுக்கையில் இருந்து எழுபவத்துடன் தொடங்குகிறீர்களா? ஆம் எனில் உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்களே விரட்டுகிறீர்கள் என்றார் அர்த்தம். குழந்தையின் அழுகையில் இருந்து வரும் எதிர்மறை ஆற்றல் உங்களின் அதிர்ஷ்டத்தை விரட்டியடிக்கும்.

MOST READ:தூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்

தட்டில் சாப்பாட்டை மிச்சம் வைக்காதீர்கள்

தட்டில் சாப்பாட்டை மிச்சம் வைக்காதீர்கள்

காலை நேரத்தில் உணவை தட்டில் மிச்சம் வைத்து விட்டு செல்வது மிகவும் மோசமான வாஸ்துவாகும். இது உங்களின் அன்றைய நாளை சோதனைகள் நிறைந்த நாளாக மாற்றும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vastu வாஸ்து
English summary

Vastu mistakes we make almost every morning

These are the most common vaastu mistakes we make almost every morning.
Story first published: Saturday, July 27, 2019, 16:47 [IST]
Desktop Bottom Promotion